மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியகவும் வந்துள்ளது.
அவற்றில், “ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டனர்.
அப்போது அவர்களிருவரும் “ஃபதக்” பகுதியிலிருந்த நபியவர்களின் நிலத்தையும் கைபரில் அவர்களுக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு கோரினர். அப்போது அவர்கள் இருவரிடமும் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி) அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த அறிவிப்புகளில் பின்வருமாறு காணப்படுகிறது: பிறகு அலீ (ரலி) அவர்கள் எழுந்து அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதிகளில் சிலவற்றைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள்; அவர்களின் சிறப்பையும் முதலிடத்தையும் பற்றிக் கூறினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்தார்கள்.
அப்போது மக்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி வந்து “நீங்கள் சரியாகவே நடந்து கொண்டீர்கள்; நன்முறையில் நடந்து கொண்டீர்கள்” என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள் நிலைமையை இயல்புக்குக் கொண்டு வந்தபோது முஸ்லிம்கள் அலீ (ரலி) அவர்களுக்கு நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.
Book : 32
(முஸ்லிம்: 3616)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ ابْنُ رَافِعٍ: حَدَّثَنَا، وقَالَ الْآخَرَانِ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ
أَنَّ فَاطِمَةَ وَالْعَبَّاسَ أَتَيَا أَبَا بَكْرٍ يَلْتَمِسَانِ مِيرَاثَهُمَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُمَا حِينَئِذٍ يَطْلُبَانِ أَرْضَهُ مِنْ فَدَكٍ، وَسَهْمَهُ مِنْ خَيْبَرَ، فَقَالَ لَهُمَا أَبُو بَكْرٍ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ مَعْنَى حَدِيثِ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ غَيْرَ أَنَّهُ قَالَ: ثُمَّ قَامَ عَلِيٌّ فَعَظَّمَ مِنْ حَقِّ أَبِي بَكْرٍ وَذَكَرَ فَضِيلَتَهُ وَسَابِقَتَهُ، ثُمَّ مَضَى إِلَى أَبِي بَكْرٍ فَبَايَعَهُ، فَأَقْبَلَ النَّاسُ إِلَى عَلِيٍّ، فَقَالُوا: أَصَبْتَ وَأَحْسَنْتَ، فَكَانَ النَّاسُ قَرِيبًا إِلَى عَلِيٍّ حِينَ قَارَبَ الْأَمْرَ الْمَعْرُوفَ
Tamil-3616
Shamila-1759
JawamiulKalim-3310
சமீப விமர்சனங்கள்