தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3625

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனா யூதர்களான) பனூ நளீர் மற்றும் பனூ குறைழா குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது போர் தொடுத்தனர். எனவே, பனூ நளீர் குலத்தாரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். பனூ குறைழா குலத்தாரை, (அவர்கள் வருத்தம் தெரிவித்ததால்) பெருந்தன்மையுடன் மன்னித்து, அவர்களை (மதீனாவிலேயே) வசிக்க விட்டுவிட்டார்கள்.

அதன் பின்னர் பனூ குறைழா குலத்தாரும் போர் தொடுத்தபோது, அவர்களில் ஆண்களைக் கொன்றார்கள். அவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் அவர்களுடைய உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச்செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

இருப்பினும், அவர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்துகொண்டனர். அந்த (பனூ குறைழா குலத்தாரில்) சிலருக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். அவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். (அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் குலத்தாரான) “பனூ கைனுகா” கூட்டத்தாரையும் பனூ ஹாரிஸா குலத்து யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மேற்கண்ட ஹதீஸே அதிகமான (தகவலைக் கொண்ட)தும் முழுமையானதும் ஆகும்.

Book : 32

(முஸ்லிம்: 3625)

وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ ابْنُ رَافِعٍ: حَدَّثَنَا، وقَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ

«أَنَّ يَهُودَ بَنِي النَّضِيرِ، وَقُرَيْظَةَ، حَارَبُوا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَجْلَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَنِي النَّضِيرِ، وَأَقَرَّ قُرَيْظَةَ وَمَنَّ عَلَيْهِمْ، حَتَّى حَارَبَتْ قُرَيْظَةُ بَعْدَ ذَلِكَ، فَقَتَلَ رِجَالَهُمْ، وَقَسَمَ نِسَاءَهُمْ وَأَوْلَادَهُمْ وَأَمْوَالَهُمْ بَيْنَ الْمُسْلِمِينَ، إِلَّا أَنَّ بَعْضَهُمْ لَحِقُوا بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَآمَنَهُمْ وَأَسْلَمُوا، وَأَجْلَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَهُودَ الْمَدِينَةِ كُلَّهُمْ، بَنِي قَيْنُقَاعَ، وَهُمْ قَوْمُ عَبْدِ اللهِ بْنِ سَلَامٍ، وَيَهُودَ بَنِي حَارِثَةَ، وَكُلَّ يَهُودِيٍّ كَانَ بِالْمَدِينَةِ»

– وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ مُوسَى، بِهَذَا الْإِسْنَادِ هَذَا الْحَدِيثَ. وَحَدِيثُ ابْنِ جُرَيْجٍ أَكْثَرُ وَأَتَمُّ


Tamil-3625
Shamila-1766
JawamiulKalim-3318




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.