தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3627

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22

ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகைவர்)களுடன் போர் செய்யலாம்; கோட்டை வாசி(களான பகைவர்)களைத் தகுதியுடைய நேர்மையான ஒரு நீதிபதியின் தீர்ப்புக்கு இணங்கச் செய்வது செல்லும்.

 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (தமது கோட்டையிலிருந்து இறங்கிவந்து தம் நட்புக் குலத் தலைவரான) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள சம்மதித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள்.

(அப்போது சஅத் (ரலி) அவர்கள் அகழ்ப்போரில் ஏற்பட்ட காயத்தால் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.) சஅத் (ரலி) அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள்.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்கோட்டையை ஒட்டித் தாற்காலிகமாக அமைத்திருந்த) பள்ளிவாசலுக்கு அருகில் சஅத் (ரலி) அவர்கள் வந்தபோது, அன்சாரிகளை நோக்கி “உங்கள் தலைவரை” அல்லது “உங்களில் சிறந்தவரை” (வரவேற்பதற்காக அவரை) நோக்கி எழுந்து செல்லுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிறகு “(சஅதே!) இவர்கள் உங்களது தீர்ப்பை ஏற்றுக்கொள்ள(ச் சம்மதித்து) இறங்கி வந்திருக்கிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சஅத் (ரலி) அவர்கள், “இவர்களிலுள்ள போர் வீரர்களைக் கொன்றுவிடுங்கள். இவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் போர்க் கைதிகளாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “”நீங்கள் அல்லாஹ்வின் தீர்ப்பை” அல்லது “அரசனின் தீர்ப்பை”யே (இவர்களின் விஷயத்தில்) வழங்கினீர்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அரசனின் தீர்ப்பை” எனும் குறிப்பு இடம்பெற வில்லை.

– மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “(சஅதே!) நீங்கள் இவர்களின் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பையே அளித்திருக்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. மற்றோர் தடவை “நீங்கள் அரசனின் தீர்ப்பை அளிந்திருக்கிறீர்கள்” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

Book : 32

(முஸ்லிம்: 3627)

22 – بَابُ جَوَازِ قِتَالِ مَنْ نَقَضَ الْعَهْدَ، وَجَوَازِ إِنْزَالِ أَهْلِ الْحِصْنِ عَلَى حُكْمِ حَاكِمٍ عَدْلٍ أَهْلٍ لِلْحُكْمِ

وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ، قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، وقَالَ الْآخَرَانِ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، قَالَ

نَزَلَ أَهْلُ قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدِ بْنِ مُعَاذٍ، فَأَرْسَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى سَعْدٍ، فَأَتَاهُ عَلَى حِمَارٍ، فَلَمَّا دَنَا قَرِيبًا مِنَ الْمَسْجِدِ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْأَنْصَارِ: «قُومُوا إِلَى سَيِّدِكُمْ» أَوْ «خَيْرِكُمْ»، ثُمَّ قَالَ: «إِنَّ هَؤُلَاءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ»، قَالَ: تَقْتُلُ مُقَاتِلَتَهُمْ وَتَسْبِي ذُرِّيَّتَهُمْ، قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَضَيْتَ بِحُكْمِ اللهِ»، وَرُبَّمَا قَالَ: «قَضَيْتَ بِحُكْمِ الْمَلِكِ»، وَلَمْ يَذْكُرِ ابْنُ الْمُثَنَّى وَرُبَّمَا قَالَ: «قَضَيْتَ بِحُكْمِ الْمَلِكِ»

– وحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ شُعْبَةَ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَ فِي حَدِيثِهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ حَكَمْتَ فِيهِمْ بِحُكْمِ اللهِ»، وَقَالَ مَرَّةً: «لَقَدْ حَكَمْتَ بِحُكْمِ الْمَلِكِ»


Tamil-3627
Shamila-1768
JawamiulKalim-3320




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.