தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3630

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் (கை நரம்பில் பட்ட அம்புக்) காயம், ஆறும் நிலையை அடைந்தபோது அவர்கள், “இறைவா! உன் தூதரை நம்ப மறுத்து, அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர்புரிவதே மற்ற எதையும்விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! குறைஷியருடனான போர் ஏதேனும் எஞ்சியிருந்தால் நான் உன் வழியில் போர் செய்ய என்னை உயிருடன் இருக்கச் செய். இறைவா! எங்களுக்கும் (குறைஷியரான) அவர்களுக்கும் இடையிலான போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்றே நான் எண்ணுகிறேன். அவ்வாறு எங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான போரை நீ முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால், (ஆறும் நிலையிலிருக்கும் எனது) காயத்திலிருந்து மீண்டும் குருதி கொப்புளிக்கச் செய்து, அதிலேயே எனக்கு (வீர)மரணத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அவ்வாறே அவரது நெஞ்செலும்பிலிருந்து குருதி கொப்புளித்தது. அவரது கூடாரத்தை ஒட்டி பனூ ஃகிஃபார் குலத்தாரின் கூடாரம் ஒன்றும் பள்ளிவாசலில் அமைக்கப்பெற்றிருந்தது.

பனூ ஃகிஃபார் குலத்தாருக்கு, சஅத் (ரலி) அவர்களது கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வந்த இரத்தம் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது அக்குலத்தார் “கூடாரவாசிகளே! உங்கள் பகுதியிலிருந்து எங்களை நோக்கிப் பாய்ந்து வருகிறதே, இது என்ன?” என்று கேட்டுக்கொண்டு, அங்கு பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழியும் நிலையில் சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தாலேயே அவர்கள் இறந்தார்கள்.

Book : 32

(முஸ்லிம்: 3630)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ

أَنَّ سَعْدًا، قَالَ وَتَحَجَّرَ كَلْمُهُ لِلْبُرْءِ، فَقَالَ: «اللهُمَّ، إِنَّكَ تَعْلَمُ أَنْ لَيْسَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ أَنْ أُجَاهِدَ فِيكَ مِنْ قَوْمٍ كَذَّبُوا رَسُولَكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَخْرَجُوهُ، اللهُمَّ، فَإِنْ كَانَ بَقِيَ مِنْ حَرْبِ قُرَيْشٍ شَيْءٌ، فَأَبْقِنِي أُجَاهِدْهُمْ فِيكَ، اللهُمَّ، فَإِنِّي أَظُنُّ أَنَّكَ قَدْ وَضَعْتَ الْحَرْبَ بَيْنَنَا وَبَيْنَهُمْ، فَإِنْ كُنْتَ وَضَعْتَ الْحَرْبَ بَيْنَنَا وَبَيْنَهُمْ فَافْجُرْهَا، وَاجْعَلْ مَوْتِي فِيهَا»، فَانْفَجَرَتْ مِنْ لَبَّتِهِ، فَلَمْ يَرُعْهُمْ وَفِي الْمَسْجِدِ مَعَهُ خَيْمَةٌ مِنْ بَنِي غِفَارٍ إِلَّا وَالدَّمُ يَسِيلُ إِلَيْهِمْ، فَقَالُوا: يَا أَهْلَ الْخَيْمَةِ مَا هَذَا الَّذِي يَأْتِينَا مِنْ قِبَلِكُمْ، فَإِذَا سَعْدٌ جُرْحُهُ يَغِذُّ دَمًا، فَمَاتَ مِنْهَا


Tamil-3630
Shamila-1769
JawamiulKalim-3322




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.