மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், “அன்றிரவே அவரது காயத்திலிருந்து குருதி கொப்புளித்தது. குருதி வழிந்தோடிக் கொண்டே இருந்து, முடிவில் அவர் இறந்துவிட்டார்” என்று இடம்பெற்றுள்ளது.
மேலும், அந்த அறிவிப்பில் பின்வரும் தகவலும் இடம்பெற்றுள்ளது: இது குறித்தே ஒரு கவிஞர் பாடினார்.
சஅதே!
பனூ முஆதின் வழித்தோன்றலே!
குறைழாவும் நளீரும்
என்ன ஆனார்கள்?
உன் வாழ்நாள் மீதாணை!
குறைழாவும் நளீரும்
நாட்டைவிட்டு
வெளியேறியபோது,
சஅத் பின் முஆத்
(அளவுக்கதிகமாக) பொறுமை காத்தார்
(அவ்ஸே!) நீங்கள் உங்கள்
பாத்திரங்களைக் காலி
செய்துவிட்டீர்கள்.
(உதவ முன்வரவில்லை.)
ஆனால், அந்த (கஸ்ரஜ்) குலத்தாரின்
பாத்திரமோ (பனூ கைனுகா),
சுடச் சுடக் கொதிக்கிறது
(காப்பாற்றப்பட்டுவிட்டனர்).
மாண்பமை அபூஹுபாப்
(அப்துல்லாஹ் பின் உபை),
“இங்கேயே தங்குவீர்,
கைனுகாவினரே!
எங்கும் சென்றுவிடாதீர்” என்றார்.
அவர்கள் இன்று
சொந்த ஊரிலேயே
திடமாக அமர்ந்துவிட்டனர்.
“மைத்தான்” (ஹிஜாஸ்) மலைமீது
கற்பாறைகள் அமர்ந்தது போல்.
Book : 32
(முஸ்லிம்: 3631)وحَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ سُلَيْمَانَ الْكُوفِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ، غَيْرَ أَنَّهُ قَالَ
فَانْفَجَرَ مِنْ لَيْلَتِهِ ، فَمَا زَالَ يَسِيلُ حَتَّى مَاتَ . وَزَادَ فِي الْحَدِيثِ : قَالَ : فَذَاكَ حِينَ يَقُولُ الشَّاعِرُ :
أَلَا يَا سَعْدُ ، سَعْدَ بَنِي مُعَاذٍ | فَمَا فَعَلَتْ قُرَيْظَةُ وَالنَّضِيرُ | |
لَعَمْرُكَ إِنَّ سَعْدَ بَنِي مُعَاذٍ | غَدَاةَ تَحَمَّلُوا لَهُوَ الصَّبُورُ | |
تَرَكْتُمْ قِدْرَكُمْ لَا شَيْءَ فِيهَا | وَقِدْرُ الْقَوْمِ حَامِيَةٌ تَفُورُ | |
وَقَدْ قَالَ الْكَرِيمُ أَبُو حُبَابٍ | أَقِيمُوا قَيْنُقَاعُ وَلَا تَسِيرُوا | |
وَقَدْ كَانُوا بِبَلْدَتِهِمْ ثِقَالًا | كَمَا ثَقُلَتْ بِمَيْطَانَ الصُّخُورُ |
Tamil-3631
Shamila-1769
JawamiulKalim-3322
சமீப விமர்சனங்கள்