தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3653

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

34 “ஹுதைபியா” எனுமிடத்தில் நடந்த “ஹுதைபியா சமாதான ஒப்பந்தம்”.

 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கும் (குறைஷி) இணைவைப்பாளர்களுக்கும் இடையே ஹுதைபியா நாளில் நடைபெற்ற சமாதான ஒப்பந்தப் பத்திரத்தை அலீ (ரலி) அவர்களே எழுதினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் எழுதிக்கொண்டது” என எழுத, இணைவைப்பாளர்கள் “அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்” என எழுதாதீர்கள்” (என்று கூறிவிட்டு நபியவர்களை நோக்கி), “நீர் அல்லாஹ்வின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருந்தால் உம்முடன் போரிட்டிருக்கவே மாட்டோம்” என்று கூறினர்.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அலீ (ரலி) அவர்களிடம்), “அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், “நான் அதை (ஒரு போதும்) அழிக்கப்போவதில்லை” என்று கூறிவிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களே தமது கரத்தால் அதை அழித்தார்கள்.

“முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்கா நகருக்குள் நுழைந்து மூன்று நாட்கள் மட்டும் தங்கியிருக்கலாம். நகருக்குள் எந்த ஆயுதத்தையும் உறையிலிட்டுத்தான் (“ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்”) எடுத்துவர வேண்டும்” என இணைவைப்பாளர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடம் “ஜுலுப் பானுஸ் ஸிலாஹ் என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் “உறையும் அதிலுள்ள ஆயுதமும்” என்று பதிலளித்தார்கள்.

Book : 32

(முஸ்லிம்: 3653)

34 – بَابُ صُلْحِ الْحُدَيْبِيَةِ فِي الْحُدَيْبِيَةِ

حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ

كَتَبَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ الصُّلْحَ بَيْنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الْمُشْرِكِينَ يَوْمَ الْحُدَيْبِيَةِ، فَكَتَبَ: «هَذَا مَا كَاتَبَ عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللهِ»، فَقَالُوا: لَا تَكْتُبْ رَسُولُ اللهِ، فَلَوْ نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللهِ لَمْ نُقَاتِلْكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «امْحُهُ»، فَقَالَ: مَا أَنَا بِالَّذِي أَمْحَاهُ، فَمَحَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، قَالَ: وَكَانَ فِيمَا اشْتَرَطُوا أَنْ يَدْخُلُوا مَكَّةَ فَيُقِيمُوا بِهَا ثَلَاثًا، وَلَا يَدْخُلُهَا بِسِلَاحٍ إِلَّا جُلُبَّانَ السِّلَاحِ، قُلْتُ لِأَبِي إِسْحَاقَ: وَمَا جُلُبَّانُ السِّلَاحِ؟ قَالَ: «الْقِرَابُ وَمَا فِيهِ»


Tamil-3653
Shamila-1783
JawamiulKalim-3341




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.