தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3701

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “நஜ்தா என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (ஐந்து விஷயங்கள் குறித்துக் கேட்டு)க் கடிதம் எழுதினார்” என்றே ஹதீஸ் ஆரம்பமாகிறது.

மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர். “களிர்” (அலை) அவர்கள், தாம் கொன்ற சிறுவனிடமிருந்து அறிந்து கொண்டதைப் போன்று நீரும் அறிந்தால் தவிர (அது உம்மால் இயலாத காரியமாகும்)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.

ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களிடமிருந்து இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் “இறைநம்பிக்கையாளரை நீர் பாகுபடுத்தி அறிந்து கொள்ள முடிந்தால் தவிர. அப்போதுதான் இறைமறுப்பாளனைக் கொல்வதற்கும் இறைநம்பிக்கையாளரை விட்டுவிடுவதற்கும் உமக்கு முடியும் (ஆனால்,சிறுவன் பிற்காலத்தில் எப்படி மாறுவான் என்பதை, “களிரை”ப் போன்று அறிந்துகொள்ள உம்மால் முடியாது)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.

Book : 32

(முஸ்லிம்: 3701)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلَاهُمَا عَنْ حَاتِمِ بْنِ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ

أَنَّ نَجْدَةَ كَتَبَ إِلَى ابْنِ عَبَّاسٍ، يَسْأَلُهُ عَنْ خِلَالٍ بِمِثْلِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، غَيْرَ أَنَّ فِي حَدِيثِ حَاتِمٍ: وَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَقْتُلُ الصِّبْيَانَ، فَلَا تَقْتُلِ الصِّبْيَانَ، إِلَّا أَنْ تَكُونَ تَعْلَمُ مَا عَلِمَ الْخَضِرُ مِنَ الصَّبِيِّ الَّذِي قَتَلَ “، وَزَادَ إِسْحَاقُ فِي حَدِيثِهِ، عَنْ حَاتِمٍ، وَتُمَيِّزَ الْمُؤْمِنَ، فَتَقْتُلَ الْكَافِرَ، وَتَدَعَ الْمُؤْمِنَ


Tamil-3701
Shamila-1812
JawamiulKalim-3383




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.