அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் மற்றொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அவ்விருவரும் (நபி (ஸல்) அவர்களிடம் அரசாங்கப்) பதவி அளிக்குமாறு கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள்.
நபியவர்கள், “அபூமூசா!” அல்லது “அப்துல்லாஹ் பின் கைஸ்!” நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தமது மனதில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை. இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியுவும் செய்யாது” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக்கொண்டிருந்த பல் துலக்கும் குச்சியை இப்போதும்கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள், “யார் பதவியை விரும்புகிறாரோ, அவருக்கு நாம் பதவியை “ஒருபோதும் கொடுக்கமாட்டோம்” அல்லது “கொடுப்பதில்லை”. ஆகவே, “அபூமூசா!” அல்லது “அப்துல்லாஹ் பின் கைஸ்!” நீங்கள் (ஆளுநராகச்) செல்லுங்கள்” என்று கூறி, என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பிறகு என்னைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.
முஆத் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தபோது “வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)” என்று கூறிவிட்டு, (அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்குத் தலையணை ஒன்றை எடுத்து வைத்தேன்.
அப்போது எனக்கு அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட முஆத் (ரலி) அவர்கள், “இவர் யார்?” என்று கேட்டார்கள். நான், “இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டு வெளியேறி) தமது பழைய துன்மார்க்கத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டார்; யூதராகிவிட்டார்” என்று சொன்னேன்.
அதற்கு முஆத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாதவரை நான் அமரமாட்டேன்” என்று கூறினார்கள். பிறகு மீண்டும் “சரி, அமருங்கள்” என்றேன். முஆத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை நான் அமரமாட்டேன்” என்று கூறினார்கள்.
இவ்வாறு மூன்று முறை நடந்தது. எனவே, அவருக்கு மரணதண்டனை அளிக்கும்படி நான் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.
பிறகு நாங்கள் இருவரும் இரவுத்தொழுகை குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது எங்களில் ஒருவர், (அதாவது) முஆத் (ரலி) அவர்கள், “நான் இரவில் சிறிது நேரம் உறங்குகிறேன். சிறிது நேரம் நின்று வணங்குகிறேன். நின்று வணங்குவதற்கு (இறைவனிடம்) நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 33
(முஸ்லிம்: 3728)حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَاللَّفْظُ لِابْنِ حَاتِمٍ، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلَالٍ، حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، قَالَ: قَالَ أَبُو مُوسَى
أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي رَجُلَانِ مِنَ الْأَشْعَرِيِّينَ، أَحَدُهُمَا عَنْ يَمِينِي، وَالْآخَرُ عَنْ يَسَارِي، فَكِلَاهُمَا سَأَلَ الْعَمَلَ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ، فَقَالَ: «مَا تَقُولُ يَا أَبَا مُوسَى؟» أَوْ «يَا عَبْدَ اللهِ بْنَ قَيْسٍ؟» قَالَ: فَقُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ، قَالَ: وَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ، وَقَدْ قَلَصَتْ، فَقَالَ: «لَنْ، أَوْ لَا نَسْتَعْمِلُ عَلَى عَمَلِنَا مَنْ أَرَادَهُ، وَلَكِنِ اذْهَبْ أَنْتَ يَا أَبَا مُوسَى»، أَوْ «يَا عَبْدَ اللهِ بْنَ قَيْسٍ»، فَبَعَثَهُ عَلَى الْيَمَنِ، ثُمَّ أَتْبَعَهُ مُعَاذَ بْنَ جَبَلٍ، فَلَمَّا قَدِمَ عَلَيْهِ، قَالَ: انْزِلْ، وَأَلْقَى لَهُ وِسَادَةً وَإِذَا رَجُلٌ عِنْدَهُ: مُوثَقٌ:، قَالَ: مَا هَذَا؟ قَالَ: هَذَا كَانَ يَهُودِيًّا فَأَسْلَمَ، ثُمَّ رَاجَعَ دِينَهُ دِينَ السَّوْءِ فَتَهَوَّدَ، قَالَ: لَا أَجْلِسُ حَتَّى يُقْتَلَ قَضَاءُ اللهِ وَرَسُولِهِ، فَقَالَ: اجْلِسْ، نَعَمْ، قَالَ: لَا أَجْلِسُ حَتَّى يُقْتَلَ قَضَاءُ اللهِ وَرَسُولِهِ، ثَلَاثَ مَرَّاتٍ، فَأَمَرَ بِهِ فَقُتِلَ، ثُمَّ تَذَاكَرَا الْقِيَامَ مِنَ اللَّيْلِ، فَقَالَ أَحَدُهُمَا، مُعَاذٌ: أَمَّا أَنَا فَأَنَامُ وَأَقُومُ، وَأَرْجُو فِي نَوْمَتِي مَا أَرْجُو فِي قَوْمَتِي
Tamil-3728
Shamila-1733
JawamiulKalim-3409
சமீப விமர்சனங்கள்