அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை அன்சாரிகளிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்குப் பின் விரைவில் உங்களைவிடப் பிறருக்கு (ஆட்சியதிகாரம் மற்றும் போர் நிதிகளைப் பங்கிடுதல் ஆகியவற்றில்) முன்னுரிமை வழங்கப்படுதலும் நீங்கள் வெறுக்கின்ற சில நிகழ்வுகளும் நடக்கும்” என்று கூறினார்கள். அன்சாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் அவற்றைச் சந்திக்கக்கூடியவர் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஆட்சியாளர்களான) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிடுங்கள். உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book : 33
(முஸ்லிம்: 3758)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، وَوَكِيعٌ، ح وحَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْأَشَجُّ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَابْنُ نُمَيْرٍ، قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَا: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كُلُّهُمْ عَنِ الْأَعْمَشِ، ح وحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِنَّهَا سَتَكُونُ بَعْدِي أَثَرَةٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا»، قَالُوا: يَا رَسُولَ اللهِ، كَيْفَ تَأْمُرُ مَنْ أَدْرَكَ مِنَّا ذَلِكَ؟ قَالَ: «تُؤَدُّونَ الْحَقَّ الَّذِي عَلَيْكُمْ، وَتَسْأَلُونَ اللهَ الَّذِي لَكُمْ»
Tamil-3758
Shamila-1843
JawamiulKalim-3436
சமீப விமர்சனங்கள்