முஜாஷிஉ பின் மஸ்ஊத் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிக்குப் பின் நான் என் சகோதரர் அபூமஅபத் (முஜாலித் பின் மஸ்ஊத் – ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியை இவரிடமிருந்து பெறுங்கள்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத் (மக்கா வெற்றிக்கு முன்) அதற்குரியவர்களோடு முடிந்துவிட்டது” என்று கூறினார்கள். நான், “அவ்வாறாயின் (இனி) எதற்காக உறுதிமொழி பெறுவீர்கள்?” என்று கேட்டேன். “இஸ்லாத்தின்படி வாழ்ந்திடவும், (தேவைப்பட்டால்) அறப்போர் புரிந்திடவும், (பிற) நற்செயல்கள் செய்திடவும்தான் (உறுதிமொழி பெறுவேன்)” என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் நான் அபூமஅபத் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் முஜாஷிஉ (ரலி) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். அதற்கு அபூ மஅபத் “முஜாஷிஉ சொன்னது உண்மையே” என்றார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் முஜாஷிஉ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், பின்னர் நான் முஜாஷிஉ (ரலி) அவர்களின் சகோதரரைச் சந்தித்(து முஜாஷிஉ சொன்ன செய்தியைத் தெரிவித்)தபோது, “முஜாஷிஉ சொன்னது உண்மையே” என்று அவர் கூறினார் என இடம்பெற்றுள்ளது. அதில் “அபூமஅபத்” எனும் பெயர் இடம்பெறவில்லை.
Book : 33
(முஸ்லிம்: 3797)وحَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: أَخْبَرَنِي مُجَاشِعُ بْنُ مَسْعُودٍ السُّلَمِيُّ، قَالَ
جِئْتُ بِأَخِي أَبِي مَعْبَدٍ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الْفَتْحِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، بَايِعْهُ عَلَى الْهِجْرَةِ، قَالَ: «قَدْ مَضَتِ الْهِجْرَةُ بِأَهْلِهَا»، قُلْتُ: فَبِأَيِّ شَيْءٍ تُبَايِعُهُ؟ قَالَ: «عَلَى الْإِسْلَامِ وَالْجِهَادِ وَالْخَيْرِ»، قَالَ أَبُو عُثْمَانَ: فَلَقِيتُ أَبَا مَعْبَدٍ، فَأَخْبَرْتُهُ بِقَوْلِ مُجَاشِعٍ، فَقَالَ: صَدَقَ
– حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَاصِمٍ بِهَذَا الْإِسْنَادِ، قَالَ: فَلَقِيتُ أَخَاهُ، فَقَالَ: صَدَقَ مُجَاشِعٌ، وَلَمْ يَذْكُرْ أَبَا مَعْبَدٍ
Tamil-3797
Shamila-1863
JawamiulKalim-3472
சமீப விமர்சனங்கள்