அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாடு துறப்பது (ஹிஜ்ரத்) பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு நாசம்தான்! ஹிஜ்ரத்தின் நிலை மிகவும் கடினமானது. உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்” என்று விடையளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றுக்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவருகிறாயா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்” என்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நீ பல ஊர்களுக்கு அப்பால் சென்றுகூட வேலை செய்(து வாழலாம்). ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதி பலன்க)ளிலிருந்து எதையும் குறைக்கமாட்டான்” என்று சொன்னார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், “அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதிபலன்க)ளிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்” என்று இடம்பெற்றுள்ளது. (“ஏனெனில்” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.) மேலும் அந்த அறிவிப்பில், “அவ்வொட்டகங்கள் (நீர்நிலைகளுக்கு) நீரருந்தச் செல்லும் (முறை) நாளில் அவற்றின் பாலைக் கற(ந்து ஏழைகளுக்கு கொடு)க்கிறாயா?” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “ஆம்” என்று பதிலளித்தார்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
Book : 33
(முஸ்லிம்: 3800)وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ الزُّهْرِيِّ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّهُ حَدَّثَهُمْ قَالَ: حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ
أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْهِجْرَةِ، فَقَالَ: «وَيْحَكَ، إِنَّ شَأْنَ الْهِجْرَةِ لَشَدِيدٌ، فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَهَلْ تُؤْتِي صَدَقَتَهَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ، فَإِنَّ اللهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا»
– وَحَدَّثَنَاهُ عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنِ الْأَوْزَاعِيِّ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، غَيْرَ أَنَّهُ قَالَ: «إِنَّ اللهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا»، وَزَادَ فِي الْحَدِيثِ قَالَ: «فَهَلْ تَحْلُبُهَا يَوْمَ وِرْدِهَا؟» قَالَ: نَعَمْ
Tamil-3800
Shamila-1865
JawamiulKalim-3475
சமீப விமர்சனங்கள்