பாடம் : 50
அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பகல் ஓர் இரவு (நாட்டின்) எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபடுவதானது, ஒரு மாதம் (பகலெல்லாம்) நோன்பு நோற்று (இரவெல்லாம்) நின்று வழிபடுவதைவிடச் சிறந்ததாகும். அ(வ்வாறு காவல் காப்ப)வர் இறந்துவிட்டாலும் அவர் செய்துவந்த நற்செயல் (களுக்குரிய நன்மை)கள் (அவரது கணக்கில்) அவருக்குப் போய்க்கொண்டிருக்கும். (இறைவனிடம்) அவர் உணவளிக்கவும்படுகிறார். மேலும், (சவக்குழியில்) வேதனை செய்பவரிடமிருந்து பாதுகாப்பும் பெறுவார்.
இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் சல்மானுல் கைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 33
(முஸ்லிம்: 3876)50 – بَابُ فَضْلِ الرِّبَاطِ فِي سَبِيلِ اللهِ عَزَّ وَجَلَّ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْرَامَ الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا لَيْثٌ يَعْنِي ابْنَ سَعْدٍ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ، عَنْ سَلْمَانَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«رِبَاطُ يَوْمٍ وَلَيْلَةٍ خَيْرٌ مِنْ صِيَامِ شَهْرٍ وَقِيَامِهِ، وَإِنْ مَاتَ جَرَى عَلَيْهِ عَمَلُهُ الَّذِي كَانَ يَعْمَلُهُ، وَأُجْرِيَ عَلَيْهِ رِزْقُهُ، وَأَمِنَ الْفَتَّانَ»
– حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شُرَيْحٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عُقْبَةَ، عَنْ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ، عَنْ سَلْمَانَ الْخَيْرِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَى حَدِيثِ اللَّيْثِ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى
Tamil-3876
Shamila-1913
JawamiulKalim-3544
சமீப விமர்சனங்கள்