தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3878

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “உங்களில் உயிர்த்தியாகி (ஷஹீத்) குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த்தியாகி ஆவார்” என்று பதிலளித்தனர்.

“அப்படியானால், என் சமுதாயத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் (எண்ணிக்கையில்) குறைந்துவிடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அவ்வாறாயின், உயிர்த்தியாகிகள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த்தியாகி ஆவார். அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர் உயிர்த் தியாகி ஆவார். கொள்ளை நோயால் இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார். வயிற்றோட்டத்தால் இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார்” என்று விடையளித்தார்கள்.

(இந்த ஹதீஸ் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள சுஹைல் பின் அபீசாலிஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் வரிசையிலும் வந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள) உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் (தமக்கு இதை அறிவித்த) சுஹைல் (ரஹ்) அவர்களிடம், “இந்த ஹதீஸின் தொடரில் “வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார்” என உங்கள் தந்தை (அபூ சாலிஹ் -ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என நான் உறுதிமொழிகிறேன்” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: சுஹைல் பின் அபீசாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (என்னிடம்) உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீஸின் தொடரில் உங்கள் தந்தை (அபூசாலிஹ் -ரஹ்) அவர்கள் “வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார்” என்று அறிவித்தார் என நான் உறுதிமொழிகிறேன்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதிலும் அபூசாலிஹ் (ரஹ்) அவர்கள் “வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர் உயிர்த் தியாகி ஆவார்” என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Book : 33

(முஸ்லிம்: 3878)

وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَا تَعُدُّونَ الشَّهِيدَ فِيكُمْ؟» قَالُوا: يَا رَسُولَ اللهِ، مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ شَهِيدٌ، قَالَ: «إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ»، قَالُوا: فَمَنْ هُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ مَاتَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ مَاتَ فِي الطَّاعُونِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ مَاتَ فِي الْبَطْنِ فَهُوَ شَهِيدٌ»، قَالَ ابْنُ مِقْسَمٍ: أَشْهَدُ عَلَى أَبِيكَ فِي هَذَا الْحَدِيثِ أَنَّهُ قَالَ: «وَالْغَرِيقُ شَهِيدٌ»

– وحَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ سُهَيْلٍ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، غَيْرَ أَنَّ فِي حَدِيثِهِ، قَالَ سُهَيْلٌ: قَالَ عُبَيْدُ اللهِ بْنُ مِقْسَمٍ، أَشْهَدُ عَلَى أَخِيكَ أَنَّهُ زَادَ فِي هَذَا الْحَدِيثِ «وَمَنْ غَرِقَ فَهُوَ شَهِيدٌ»

– وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، بِهَذَا الْإِسْنَادِ وَفِي حَدِيثِهِ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللهِ بْنُ مِقْسَمٍ، عَنْ أَبِي صَالِحٍ، وَزَادَ فِيهِ: «وَالْغَرِقُ شَهِيدٌ»


Tamil-3878
Shamila-1915
JawamiulKalim-3546




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.