குர்பானிப் பிராணிகள்
பாடம் : 1
குர்பானி கொடுக்கப்படும் நேரம்.
ஜுன்தப் பின் (அப்தில்லாஹ் பின்) சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் துல்ஹஜ் பத்தாவது நாளன்று (பெருநாள் தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் (பெருநாள்) தொழுகையைத் தொழுது சலாம் கொடுத்தார்களோ இல்லையோ, அங்கு குர்பானிப் பிராணிகளின் இறைச்சியைக் கண்டார்கள். நபியவர்கள் தொழுது முடிப்பதற்கு முன்பே அவை அறுக்கப்பட்டிருந்தன. எனவே, “தாம் தொழுவதற்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டவர்” அல்லது “நாம் தொழுவதற்கு முன்பே (குர்பானியை அறுத்துவிட்டவர்)” அதற்குப் பதிலாக மற்றொரு பிராணியை அறுக்கட்டும். (தொழுகை முடியும்வரை) அறுக்காமலிருந்தவர் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வின் பெயர் (“பிஸ்மில்லாஹ்…”)சொல்லி அறுக்கட்டும்!” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 35
35 – كتاب الْأَضَاحِيِّ
1 – بَابُ وَقْتِهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ قَيْسٍ، ح وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ، حَدَّثَنِي جُنْدَبُ بْنُ سُفْيَانَ، قَالَ
شَهِدْتُ الْأَضْحَى مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَعْدُ أَنْ صَلَّى وَفَرَغَ مِنْ صَلَاتِهِ سَلَّمَ، فَإِذَا هُوَ يَرَى لَحْمَ أَضَاحِيَّ قَدْ ذُبِحَتْ قَبْلَ أَنْ يَفْرُغَ مِنْ صَلَاتِهِ، فَقَالَ: «مَنْ كَانَ ذَبَحَ أُضْحِيَّتَهُ قَبْلَ أَنْ يُصَلِّيَ – أَوْ نُصَلِّيَ -، فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى، وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ، فَلْيَذْبَحْ بِاسْمِ اللهِ»
Tamil-3959
Shamila-1960
JawamiulKalim-3628
சமீப விமர்சனங்கள்