தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3961

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜுன்தப் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுப் பெருநாளன்று (தொழுகையில்) கலந்துகொண்டேன். அவர்கள் (குத்பா-உரை நிகழ்த்துவதற்கு முன்பே) தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர், அதனிடத்தில் (அதற்குப் பதிலாக) வேறொன்றை (தொழுகைக்குப் பின்) அறுக்கட்டும். (தொழுகைக்கு முன்பே) அறுக்காமலிருந்தவர் (தொழுகை முடிந்தவுடன்) அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்!” என்று சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 35

(முஸ்லிம்: 3961)

حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْأَسْوَدِ، سَمِعَ جُنْدَبًا الْبَجَلِيَّ، قَالَ

شَهِدْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ أَضْحًى، ثُمَّ خَطَبَ، فَقَالَ: «مَنْ كَانَ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَلْيُعِدْ مَكَانَهَا، وَمَنْ لَمْ يَكُنْ ذَبَحَ، فَلْيَذْبَحْ بِاسْمِ اللهِ»

– حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


Tamil-3961
Shamila-1960
JawamiulKalim-3630




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.