தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3991

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “மதீனாவாசிகளே! குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் உண்ணாதீர்கள்” என்று கூறினார்கள்.

அப்போது மதீனாவாசிகள், தங்களுக்குக் குழந்தை குட்டிகளும் (இன்பம் துன்பங்களில் பங்கெடுக்கும்) உதவியாளர்களும் ஊழியர்களும் இருப்பதாக(வும் அவர்களுக்குக் கொடுப்பதற்கு இறைச்சி வேண்டும் எனவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்களும் உண்ணுங்கள். (பிறருக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்தும் வையுங்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் இப்னுல் முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “சேமித்தும் வையுங்கள்” என்பதைக் குறிக்க “இஹ்பிஸூ” அல்லது “இத்தகிரூ” என்று ஐயப்பாட்டுடன் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களே அறிவித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.

Book : 35

(முஸ்லிம்: 3991)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«يَا أَهْلَ الْمَدِينَةِ، لَا تَأْكُلُوا لُحُومَ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ» – وقَالَ ابْنُ الْمُثَنَّى: ثَلَاثَةِ أَيَّامٍ -، فَشَكَوْا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ لَهُمْ عِيَالًا، وَحَشَمًا، وَخَدَمًا، فَقَالَ: «كُلُوا، وَأَطْعِمُوا، وَاحْبِسُوا»، أَوْ «ادَّخِرُوا»، قَالَ ابْنُ الْمُثَنَّى: شَكَّ عَبْدُ الْأَعْلَى


Tamil-3991
Shamila-1973
JawamiulKalim-3654




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.