மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “நான் என் உறவினரிடையே நின்று (மது) பரிமாறிக்கொண்டிருந்தேன்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், அதில் பின்வருமாறு காணப்படுகிறது:
அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் “அதுவே அன்றைய நாளில் அவர்களின் மதுபானமாக இருந்தது” என்று கூறினார்கள். அந்த இடத்தில் அனஸ் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அ(பூபக்ர் அவ்வாறு கூறிய)தை அனஸ் (ரலி) அவர்கள் மறுக்கவில்லை.
முஅதமிர் பின் சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், “அன்றைய நாளில் அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது” என அனஸ் (ரலி) அவர்களே கூறியதை நான் கேட்டேன் என என்னுடனிருந்த ஒருவர் எனக்கு அறிவித்தார்” என்று இடம்பெற்றுள்ளது.
Book : 36
(முஸ்லிம்: 4009)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ أَنَسٌ
كُنْتُ قَائِمًا عَلَى الْحَيِّ أَسْقِيهِمْ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ، غَيْرَ أَنَّهُ قَالَ: فَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ: كَانَ خَمْرَهُمْ يَوْمَئِذٍ، وَأَنَسٌ شَاهِدٌ، فَلَمْ يُنْكِرْ أَنَسٌ ذَاكَ، وَقَالَ ابْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، قَالَ: حَدَّثَنِي بَعْضُ مَنْ كَانَ مَعِي، أَنَّهُ سَمِعَ أَنَسًا، يَقُولُ: كَانَ خَمْرَهُمْ يَوْمَئِذٍ
Tamil-4009
Shamila-1980
JawamiulKalim-3671
சமீப விமர்சனங்கள்