இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் கலந்துகொண்ட போர் ஒன்றில் மக்களிடையே உரையாற்றினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த பகுதியை நோக்கிச் சென்றேன். நான் அங்கு சென்றடைவதற்குள் (அவர்கள் உரையை முடித்துத்) திரும்பிவிட்டார்கள்.
எனவே நான் (மக்களிடம்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். மக்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் (பானங்களை) ஊற்றிவைக்க வேண்டாம் எனத் தடை விதித்தார்கள்” என்று பதிலளித்தனர்.
Book : 36
(முஸ்லிம்: 4051)حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ فِي بَعْضِ مَغَازِيهِ، قَالَ ابْنُ عُمَرَ: فَأَقْبَلْتُ نَحْوَهُ، فَانْصَرَفَ قَبْلَ أَنْ أَبْلُغَهُ، فَسَأَلْتُ مَاذَا، قَالَ: قَالُوا: «نَهَى أَنْ يُنْتَبَذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ»
Tamil-4051
Shamila-1997
JawamiulKalim-3714
சமீப விமர்சனங்கள்