ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானங்களைத் தடை செய்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அவ்வாறே மக்கள் கூறுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்தார்களா?” என்று (மீண்டும்) கேட்டேன். இப்னு உமர் (ரலி) அவர்கள் “அவ்வாறே மக்கள் கூறுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
– தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்ட களிமண் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு தாவூஸ் (ரஹ்) அவர்கள் “அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறே நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று கூறினார்கள்.
Book : 36
(முஸ்லிம்: 4053)وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، قَالَ
قُلْتُ لِابْنِ عُمَرَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ؟، قَالَ: فَقَالَ: «قَدْ زَعَمُوا ذَاكَ»، قُلْتُ: أَنَهَى عَنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «قَدْ زَعَمُوا ذَاكَ»
– حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ طَاوُسٍ، قَالَ: قَالَ رَجُلٌ لِابْنِ عُمَرَ: أَنَهَى نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ؟ قَالَ: «نَعَمْ»، ثُمَّ قَالَ طَاوُسٌ: «وَاللهِ إِنِّي سَمِعْتُهُ مِنْهُ»
Tamil-4053
Shamila-1997
JawamiulKalim-3715,
3716
சமீப விமர்சனங்கள்