நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“உலகில் மது அருந்திவிட்டு அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவருக்கு மறுமையில் (சொர்க்கத்தின்) மது அருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும். அது அவருக்குப் புகட்டப்பட மாட்டாது” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் கஅனப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம் “நாஃபிஉ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்களா?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு மாலிக் (ரஹ்), அவர்கள், “ஆம்” என்றார்கள்.
Book : 36
(முஸ்லிம்: 4080)حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ
«مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا، فَلَمْ يَتُبْ مِنْهَا، حُرِمَهَا فِي الْآخِرَةِ، فَلَمْ يُسْقَهَا»، قِيلَ لِمَالِكٍ: رَفَعَهُ؟ قَالَ: «نَعَمْ»
Tamil-4080
Shamila-2003
JawamiulKalim-3744
சமீப விமர்சனங்கள்