தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4086

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 யஹ்யா பின் உபைத் அபூஉமர் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், மதுவை விற்பது, வாங்குவது, வியாபாரம் செய்வது ஆகியவற்றைப் பற்றிக் கேட்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நீங்களெல்லாம் முஸ்லிம்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்று கூறினர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “மதுவை விற்பதும் கூடாது; வாங்குவதும் கூடாது; அது தொடர்பான வியாபாரங்களில் ஈடுபடுவதும் கூடாது” என்று கூறினார்கள். பிறகு மக்கள், பழச்சாறுகள் பற்றிக் கேட்டபோது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டுச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் மண் சாடிகளிலும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரத்திலும் சுரைக்காய் குடுவையிலும் பழச்சாறுகளை ஊறவைத்திருந்தனர். அவற்றைக் கொட்டிவிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவை கொட்டப்பட்டன.

பிறகு தோல் பையொன்றைக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார்கள். (அதைக் கொண்டு வந்ததும்) அதில் உலர்ந்த திராட்சைகளும் சிறிது தண்ணீரும் ஊற்றப்பட்டது. பிறகு அது அந்த இரவு முழுவதும் அப்படியே (ஊற) விடப்பட்டது. காலையானதும் அன்றைய தினம் முழுவதிலும் அடுத்த இரவிலும் அதற்கடுத்த நாள் மாலைவரையிலும் அதில் தாமும் அருந்தினார்கள்; (பிறருக்கும்) அருந்தக் கொடுத்தார்கள். (அடுத்த நாள்) காலையில் அதில் எஞ்சியிருந்ததைக் கொட்டிவிடுமாறு அவர்கள் உத்தரவிட அவ்வாறே அது கொட்டப்பட்டது.

Book : 36

(முஸ்லிம்: 4086)

وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ، عَنْ زَيْدٍ، عَنْ يَحْيَى أَبِي عُمَرَ النَّخَعِيِّ، قَالَ

سَأَلَ قَوْمٌ ابْنَ عَبَّاسٍ عَنْ بَيْعِ الْخَمْرِ وَشِرَائِهَا وَالتِّجَارَةِ فِيهَا، فَقَالَ: أَمُسْلِمُونَ أَنْتُمْ؟ قَالُوا: نَعَمْ، قَالَ: فَإِنَّهُ لَا يَصْلُحُ بَيْعُهَا، وَلَا شِرَاؤُهَا، وَلَا التِّجَارَةُ فِيهَا، قَالَ: فَسَأَلُوهُ عَنِ النَّبِيذِ، فَقَالَ: «خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، ثُمَّ رَجَعَ وَقَدْ نَبَذَ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فِي حَنَاتِمَ وَنَقِيرٍ وَدُبَّاءٍ، فَأَمَرَ بِهِ فَأُهْرِيقَ، ثُمَّ أَمَرَ بِسِقَاءٍ فَجُعِلَ فِيهِ زَبِيبٌ وَمَاءٌ، فَجُعِلَ مِنَ اللَّيْلِ فَأَصْبَحَ، فَشَرِبَ مِنْهُ يَوْمَهُ ذَلِكَ وَلَيْلَتَهُ الْمُسْتَقْبَلَةَ، وَمِنَ الْغَدِ حَتَّى أَمْسَى، فَشَرِبَ وَسَقَى، فَلَمَّا أَصْبَحَ أَمَرَ بِمَا بَقِيَ مِنْهُ فَأُهْرِيقَ»


Tamil-4086
Shamila-2004
JawamiulKalim-3750




மேலும் பார்க்க: முஸ்லிம்-4082 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.