ஸுமாமா பின் ஹஸ்ன் அல்குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, பழச்சாறுகள் பற்றிக் கேட்டேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள்,அபிசீனியாவைச் சேர்ந்த (கறுப்பு நிற) அடிமைப்பெண் ஒருவரை அழைத்து, “இவரிடம் கேளுங்கள். இவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகப் பழச்சாறுகளை ஊறவைப்பவராக இருந்தார்” என்று கூறினார்கள்.
அப்போது அந்த அபிசீனிய (அடிமைப்)பெண், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக இரவில் தண்ணீர் தோல் பையில் பழச்சாற்றை ஊற்றிவைத்து, அதன் வாய்ப் பகுதியை சுருக்கிட்டுக் கட்டி, அதை தொங்க விட்டுவிடுவேன். மறுநாள் காலையில் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்துவார்கள்” என்று கூறினார்.
Book : 36
(முஸ்லிம்: 4087)حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا الْقَاسِمُ يَعْنِي ابْنَ الْفَضْلِ الْحُدَّانِيَّ، حَدَّثَنَا ثُمَامَةُ يَعْنِي ابْنَ حَزْنٍ الْقُشَيْرِيَّ، قَالَ
لَقِيتُ عَائِشَةَ، فَسَأَلْتُهَا عَنِ النَّبِيذِ، فَدَعَتْ عَائِشَةُ جَارِيَةً حَبَشِيَّةً، فَقَالَتْ: سَلْ هَذِهِ، فَإِنَّهَا كَانَتْ تَنْبِذُ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتِ الْحَبَشِيَّةُ: «كُنْتُ أَنْبِذُ لَهُ فِي سِقَاءٍ مِنَ اللَّيْلِ وَأُوكِيهِ وَأُعَلِّقُهُ، فَإِذَا أَصْبَحَ شَرِبَ مِنْهُ»
Tamil-4087
Shamila-2005
JawamiulKalim-3751
சமீப விமர்சனங்கள்