சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஉசைத் (மாலிக் பின் ரபீஆ) அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் தமது திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அதில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்டார்கள்.) அபூஉசைத் (ரலி) அவர்களின் துணைவியார் (சலாமா பின்த் உஹைப் – ரலி) அவர்களே -அவர்தாம் மணப்பெண்- அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடைகள் செய்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பருகுவதற்கு மணப்பெண் என்ன வழங்கினார் தெரியுமா? அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கென்றே இரவில் பேரீச்சம் பழங்களைக் கல் தொட்டியொன்றில் ஊறப்போட்டுவைத்திருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலீமா விருந்தை) உண்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பருகத்தந்தார்.
– மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், “அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களை (மணவிருந்துக்கு) அழைத்தார்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அதில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலீமா விருந்தை) உண்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர் பருகத் தந்தார்” எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
Book : 36
(முஸ்லிம்: 4089)حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ
دَعَا أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي عُرْسِهِ، فَكَانَتِ امْرَأَتُهُ يَوْمَئِذٍ خَادِمَهُمْ وَهِيَ الْعَرُوسُ، قَالَ سَهْلٌ: تَدْرُونَ مَا سَقَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْقَعَتْ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ فِي تَوْرٍ، فَلَمَّا أَكَلَ سَقَتْهُ إِيَّاهُ»
– وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ، قَالَ: سَمِعْتُ سَهْلًا، يَقُولُ: أَتَى أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ، وَلَمْ يَقُلْ: فَلَمَّا أَكَلَ سَقَتْهُ إِيَّاهُ
Tamil-4089
Shamila-2006
JawamiulKalim-3753
சமீப விமர்சனங்கள்