தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4153

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

பலருடன் சேர்ந்து உண்பவர், மற்றவர்கள் அனுமதித்தால் தவிர, ஒரே தடவையில் இரண்டு பேரீச்சம் பழங்களைச் சேர்த்து உண்ணக்கூடாது.

 ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஹிஜாஸ் பகுதியில்) மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருந்த நாளில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழங்களை வழங்கிவந்தார்கள். அவற்றை நாங்கள் உண்ணும்போது, அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள்.

அப்போது அவர்கள், “பேரீச்சம் பழங்களை இரண்டிரண்டாக எடுக்காதீர்கள். ஏனெனில், ஒரே தடவையில் இரண்டு பழங்களை எடுத்து உண்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்; ஒருவர் தம் சகோதரரிடம் (அவ்வாறு சேர்த்து எடுக்க) அனுமதி பெற்றிருந்தால் தவிர” என்று சொல்வார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஷுஅபா (ரஹ்) அவர்கள், “அனுமதி பெறுதல் தொடர்பான இக்கூற்று, இப்னு உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்து என்றே நான் கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களின் (இறுதிக்) கூற்றோ, “அன்றைய நாளில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருந்தது” எனும் விளக்கமோ இடம்பெறவில்லை.

Book : 36

(முஸ்லிம்: 4153)

25 – بَابُ نَهْيِ الْآكِلِ مَعَ جَمَاعَةٍ عَنْ قِرَانِ تَمْرَتَيْنِ وَنَحْوِهِمَا فِي لُقْمَةٍ إِلَّا بِإِذْنِ أَصْحَابِهِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ جَبَلَةَ بْنَ سُحَيْمٍ، قَالَ

كَانَ ابْنُ الزُّبَيْرِ يَرْزُقُنَا التَّمْرَ، قَالَ: وَقَدْ كَانَ أَصَابَ النَّاسَ يَوْمَئِذٍ جَهْدٌ، وَكُنَّا نَأْكُلُ فَيَمُرُّ عَلَيْنَا ابْنُ عُمَرَ وَنَحْنُ نَأْكُلُ، فَيَقُولُ: «لَا تُقَارِنُوا فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْإِقْرَانِ، إِلَّا أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ أَخَاهُ»، – قَالَ شُعْبَةُ: لَا أُرَى هَذِهِ الْكَلِمَةَ إِلَّا مِنْ كَلِمَةِ ابْنِ عُمَرَ يَعْنِي الِاسْتِئْذَانَ

– وَحَدَّثَنَاهُ عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، كِلَاهُمَا عَنْ شُعْبَةَ بِهَذَا الْإِسْنَادِ، وَلَيْسَ فِي حَدِيثِهِمَا قَوْلُ شُعْبَةَ، وَلَا قَوْلُهُ: وَقَدْ كَانَ أَصَابَ النَّاسَ يَوْمَئِذٍ جَهْدٌ


Tamil-4153
Shamila-2045
JawamiulKalim-3816




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.