பாடம் : 12
நபி (ஸல்) அவர்கள் “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை அணிந்திருந்ததும் அதை நபியவர்களுக்குப் பின் (மூன்று) கலீஃபாக்களும் அணிந்திருந்ததும்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களது கையில் இருந்தது. பிறகு (முதலாவது கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு (இரண்டாவது கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது.
பிறகு (மூன்றாவது கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து “அரீஸ்” எனும் கிணற்றில் (தவறி)விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்றிருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
Book : 37
(முஸ்லிம்: 4245)حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللهِ، ح وحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ
«اتَّخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ وَرِقٍ، فَكَانَ فِي يَدِهِ، ثُمَّ كَانَ فِي يَدِ أَبِي بَكْرٍ، ثُمَّ كَانَ فِي يَدِ عُمَرَ، ثُمَّ كَانَ فِي يَدِ عُثْمَانَ، حَتَّى وَقَعَ مِنْهُ فِي بِئْرِ أَرِيسٍ، نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ»، قَالَ ابْنُ نُمَيْرٍ: حَتَّى وَقَعَ فِي بِئْرِ وَلَمْ يَقُلْ مِنْهُ
Tamil-4245
Shamila-2091
JawamiulKalim-3906
சமீப விமர்சனங்கள்