அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் நான் (புலம்பெயர்ந்து) மதீனா சென்றேன். (வழியில்) “குபா”வில் நான் தங்கினேன். “குபா”விலேயே அவரை நான் பெற்றெடுத்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (குழந்தையைக் கொண்டு)சென்று அவர்களது மடியில் வைத்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதை மென்று, குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் உணவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது.
பிறகு (மீண்டும்) அந்தப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் தடவலானார்கள். பின்னர் குழந்தைக்காகப் பிரார்த்தித்தார்கள். அதற்காக அருள்வளம் (பரக்கத்) வேண்டினார்கள். (என் குழந்தை) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்குப்) பிறந்த முதல் குழந்தை ஆவார்.
– மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், “நான் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரைக் கருவுற்றிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மதீனாவுக்கு) நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றேன்…” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
Book : 38
(முஸ்லிம்: 4344)حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ
أَنَّهَا حَمَلَتْ بِعَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ بِمَكَّةَ قَالَتْ: فَخَرَجْتُ وَأَنَا مُتِمٌّ، فَأَتَيْتُ الْمَدِينَةَ فَنَزَلْتُ بِقُبَاءٍ فَوَلَدْتُهُ بِقُبَاءٍ، ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَوَضَعَهُ فِي حَجْرِهِ، ثُمَّ دَعَا بِتَمْرَةٍ فَمَضَغَهَا، ثُمَّ تَفَلَ فِي فِيهِ، فَكَانَ أَوَّلَ شَيْءٍ دَخَلَ جَوْفَهُ رِيقُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ حَنَّكَهُ بِالتَّمْرَةِ، ثُمَّ دَعَا لَهُ وَبَرَّكَ عَلَيْهِ، وَكَانَ أَوَّلَ مَوْلُودٍ وُلِدَ فِي الْإِسْلَامِ»
– حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا هَاجَرَتْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ حُبْلَى بِعَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ أَبِي أُسَامَةَ
Tamil-4344
Shamila-2146
JawamiulKalim-4006
சமீப விமர்சனங்கள்