முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மகா பொய்யனான) தஜ்ஜாலைப் பற்றி நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. அவர்கள் என்னிடம் “மகனே! அவனைப் பற்றி உனக்கென்ன கவலை? அவன் உனக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டான்” என்று சொன்னார்கள்.
நான், “அவனுடன் நதியளவு நீரும் மலையளவு ரொட்டியும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்களே!” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்ட விரும்புகிறானோ) அவற்றைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதே” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே நபி (ஸல்) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களை “மகனே!” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. வேறெந்த அறிவிப்பிலும் அவ்வாறு இல்லை.
Book : 38
(முஸ்லிம்: 4350)وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ أَبِي عُمَرَ – وَاللَّفْظُ لِابْنِ أَبِي عُمَرَ – قَالَا: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ
مَا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدٌ عَنِ الدَّجَّالِ أَكْثَرَ مِمَّا سَأَلْتُهُ عَنْهُ، فَقَالَ لِي: «أَيْ بُنَيَّ وَمَا يُنْصِبُكَ مِنْهُ؟ إِنَّهُ لَنْ يَضُرَّكَ» قَالَ قُلْتُ: إِنَّهُمْ يَزْعُمُونَ أَنَّ مَعَهُ أَنْهَارَ الْمَاءِ وَجِبَالَ الْخُبْزِ، قَالَ: «هُوَ أَهْوَنُ عَلَى اللهِ مِنْ ذَلِكَ»
– حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا هُشَيْمٌ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، كُلُّهُمْ عَنْ إِسْمَاعِيلَ، بِهَذَا الْإِسْنَادِ وَلَيْسَ فِي حَدِيثِ أَحَدٍ مِنْهُمْ قَوْلُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْمُغِيرَةِ «أَيْ بُنَيَّ» إِلَّا فِي حَدِيثِ يَزِيدَ وَحْدَهُ
Tamil-4350
Shamila-2152
JawamiulKalim-4012
சமீப விமர்சனங்கள்