தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4396

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) அலி ஒருவர் வருவார். அவர் பாலுறவு வேட்கையில்லாதவர்களில் ஒருவர் என்றே கருதிவந்தார்கள். ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஒருவரிடம் இருந்தபோது, அங்கு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்த அலி ஒரு பெண்ணைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருந்தார். “அவள் வந்தால் நாலு (சதை மடிப்புகளு)டன் வருவாள். போனால் எட்டு (சதை மடிப்புகளு)டன் போவாள்” என்று அவர் சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், “இவர் இங்குள்ள (பெண்களின்) நிலைமை பற்றியும் அறிவார் என்று நான் ஏன் கருதக்கூடாது? (அலிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வர வேண்டாம்” என்று கூறினார்கள். எனவே, அவரை(ப் பெண்களைவிட்டு)த் தடுத்துவிட்டார்கள்.

Book : 39

(முஸ்லிம்: 4396)

وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ

كَانَ يَدْخُلُ عَلَى أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُخَنَّثٌ فَكَانُوا يَعُدُّونَهُ مِنْ غَيْرِ أُولِي الْإِرْبَةِ، قَالَ فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ، وَهُوَ يَنْعَتُ امْرَأَةً، قَالَ: إِذَا أَقْبَلَتْ أَقْبَلَتْ بِأَرْبَعٍ، وَإِذَا أَدْبَرَتْ أَدْبَرَتْ بِثَمَانٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أَرَى هَذَا يَعْرِفُ مَا هَاهُنَا لَا يَدْخُلَنَّ عَلَيْكُنَّ» قَالَتْ: فَحَجَبُوهُ


Tamil-4396
Shamila-2181
JawamiulKalim-4056




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.