பாடம் : 27
(நோயாளியை வற்புறுத்தி, அல்லது அவர் மயக்கத்திலிருக்கும்போது) வாய் ஓரத்தில் மருந்தூற்றி சிகிச்சையளிப்பது வெறுக்கத் தக்கதாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்று (அரை மயக்கத்தில்) இருந்தபோது, அவர்களது வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். உடனே அவர்கள் “மருந்து ஊற்ற வேண்டாம்” என்று எங்களுக்குச் சைகை செய்தார்கள். “நோயாளி மருந்தை வெறுப்பது போன்று தான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் வெறுக்கிறார்கள்; ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை)” என்று நாங்கள் சொல்லிக்கொண்டோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது, “ஒருவரும் விடுபடாமல் (வீட்டிலுள்ள) அனைவரது வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும்; அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், (என் வாயில் மருந்து ஊற்றும்போது) உங்களுடன் அவர் இருக்கவில்லை” என்று சொன்னார்கள்.
Book : 39
(முஸ்லிம்: 4448)27 – بَابُ كَرَاهَةِ التَّدَاوِي بِاللَّدُودِ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
لَدَدْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ، فَأَشَارَ أَنْ لَا تَلُدُّونِي، فَقُلْنَا: كَرَاهِيَةَ الْمَرِيضِ لِلدَّوَاءِ، فَلَمَّا أَفَاقَ قَالَ: «لَا يَبْقَى أَحَدٌ مِنْكُمْ إِلَّا لُدَّ، غَيْرُ الْعَبَّاسِ، فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ»
Tamil-4448
Shamila-2213
JawamiulKalim-4108
சமீப விமர்சனங்கள்