தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4493

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் சாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இந்நிலையில் என்னைக் கண்ட அபூலுபாபா பின் அப்தில் முன்திர் (ரலி), ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) ஆகிய இருவரும், “வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள் என்று கூறினர்” என இடம்பெற்றுள்ளது.

யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “பாம்புகளைக் கொல்லுங்கள்” என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. “முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள்” என்பது இடம் பெறவில்லை.

Book : 39

(முஸ்லிம்: 4493)

– وحَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، ح وَحَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ كُلُّهُمْ، عَنِ الزُّهْرِيِّ بِهَذَا الْإِسْنَادِ، غَيْرَ أَنَّ صَالِحًا قَالَ: حَتَّى رَآنِي أَبُو لُبَابَةَ بْنُ عَبْدِ الْمُنْذِرِ، وَزَيْدُ بْنُ الْخَطَّابِ، فَقَالَا: «إِنَّهُ قَدْ نَهَى عَنْ ذَوَاتِ الْبُيُوتِ» وَفِي حَدِيثِ يُونُسَ «اقْتُلُوا الْحَيَّاتِ» وَلَمْ يَقُلْ «ذَا الطُّفْيَتَيْنِ وَالْأَبْتَرَ»


Tamil-4493
Shamila-2233
JawamiulKalim-4148




6 . இந்தக் கருத்தில் ஸைத் பின் கத்தாப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-4557 , 15748 , முஸ்லிம்-4493 , 4499 , அபூதாவூத்-5252 ,

மேலும் பார்க்க: புகாரி-3297 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.