அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் “அஸ்ஸவ்ரா” எனுமிடத்தில் இருந்தார்கள். (அஸ்ஸவ்ரா என்பது மதீனாவின் கடைத்தெருவுக்கும் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கும் அருகில் இருந்த ஓர் இடமாகும்.) அப்போது நபி (ஸல்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்வதற்காகப்) பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள். அதில் சிறிது தண்ணீர் இருந்தது. பிறகு அப்பாத்திரத்தினுள் தமது கையை வைத்தார்கள். அப்போது அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரக்கலாயிற்று. (அங்கிருந்த) நபித்தோழர்கள் அனைவரும் அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தனர்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம் “அபூஹம்ஸா அவர்களே! அவர்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தனர்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் “சுமார் முந்நூறு பேர் இருந்தனர்” என்று பதிலளித்தார்கள்.
Book : 43
(முஸ்லிம்: 4578)حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ
أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ بِالزَّوْرَاءِ – قَالَ: وَالزَّوْرَاءُ بِالْمَدِينَةِ عِنْدَ السُّوقِ وَالْمَسْجِدِ فِيمَا ثَمَّهْ – دَعَا بِقَدَحٍ فِيهِ مَاءٌ، فَوَضَعَ كَفَّهُ فِيهِ «فَجَعَلَ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ، فَتَوَضَّأَ جَمِيعُ أَصْحَابِهِ» قَالَ قُلْتُ: كَمْ كَانُوا؟ يَا أَبَا حَمْزَةَ قَالَ: «كَانُوا زُهَاءَ الثَّلَاثِمِائَةِ»
Tamil-4578
Shamila-2279
JawamiulKalim-4233
சமீப விமர்சனங்கள்