பாடம் : 2
உமர் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப் பட்டிருந்தார்கள். அப்போது மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பிரார்த்திக்கவும் பாராட்டவும் செய்தனர். பிரேதம் எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா தொழுகை) தொழுதனர். அவர்களிடையே நானும் இருந்தேன்.
அப்போது ஒரு மனிதர் எனக்குப் பின்னாலிருந்து என் தோளைப் பிடித்து என்னைத் திடுக்கிடச் செய்தார். (யாரென்று) நான் திரும்பிப் பார்த்தபோது, அவர் அலீ (ரலி) அவர்கள்தான்.
அவர்கள் “உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!” என்று பிரார்த்தித்துவிட்டு, “(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத்தக்கவர் யாரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள்தான் அதற்குத் தகுதியான மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை உங்களுடைய இரு தோழர்களுடன்தான் அல்லாஹ் இருக்கச் செய்வான் (அதாவது நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகியோருடன் நீங்கள் அடக்கம் செய்யப்படுவீர்கள்) என்றே நான் எண்ணியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும் உமரும் வந்தோம்”. என்றும், “நானும் அபூபக்ரும் உமரும் உள்ளே சென்றோம்” என்றும், “நானும் அபூபக்ரும் உமரும் வெளியில் புறப்பட்டோம்” என்றும் சொல்வதை நான் அதிகமாகச் செவியுற்றிருக்கிறேன். அதனால்தான் உங்களை உங்கள் இரு தோழர்களுடன்தான் (அல்லாஹ்) அடங்கச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கிறேன் அல்லது எண்ணுகிறேன்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 44
(முஸ்லிம்: 4760)2 – بَابُ مِنْ فَضَائِلِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ، وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَأَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ – وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَ أَبُو الرَّبِيعِ: حَدَّثَنَا وقَالَ الْآخَرَانِ: أَخْبَرَنَا – ابْنُ الْمُبَارَكِ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ
وُضِعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَى سَرِيرِهِ، فَتَكَنَّفَهُ النَّاسُ يَدْعُونَ وَيُثْنُونَ وَيُصَلُّونَ عَلَيْهِ، قَبْلَ أَنْ يُرْفَعَ، وَأَنَا فِيهِمْ، قَالَ فَلَمْ يَرُعْنِي إِلَّا بِرَجُلٍ قَدْ أَخَذَ بِمَنْكِبِي مِنْ وَرَائِي، فَالْتَفَتُّ إِلَيْهِ فَإِذَا هُوَ عَلِيٌّ، فَتَرَحَّمَ عَلَى عُمَرَ، وَقَالَ: مَا خَلَّفْتَ أَحَدًا أَحَبَّ إِلَيَّ أَنْ أَلْقَى اللهَ بِمِثْلِ عَمَلِهِ مِنْكَ، وَايْمُ اللهِ إِنْ كُنْتُ لَأَظُنُّ أَنْ يَجْعَلَكَ اللهُ مَعَ صَاحِبَيْكَ، وَذَاكَ أَنِّي كُنْتُ أُكَثِّرُ أَسْمَعُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «جِئْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَدَخَلْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَخَرَجْتُ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، فَإِنْ كُنْتُ لَأَرْجُو، أَوْ لَأَظُنُّ، أَنْ يَجْعَلَكَ اللهُ مَعَهُمَا»
– وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ فِي هَذَا الْإِسْنَادِ بِمِثْلِهِ
Tamil-4760
Shamila-2389
JawamiulKalim-4409
சமீப விமர்சனங்கள்