தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4767

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கிருந்த மாளிகை ஒன்றின் ஓரத்தில் ஒரு பெண் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்தாள். அப்போது நான், “இந்த மாளிகை யாருக்குரியது?” என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), “உமர் பின் அல்கத்தாபுக்குரியது” எனப் பதிலளித்தனர். (அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன்.) உமரின் தன்மான உணர்வு என் நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்து திரும்பிவந்துவிட்டேன்.

இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இ(வ்வாறு அவர்கள் கூறிய)தைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அந்த அவையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அனைவரும் இருந்தோம். பிறகு உமர் (ரலி) அவர்கள், “என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் தன்மான உணர்வைக் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 44

(முஸ்லிம்: 4767)

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ

بَيْنَا أَنَا نَائِمٌ إِذْ رَأَيْتُنِي فِي الْجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، فَقُلْتُ: لِمَنْ هَذَا؟ فَقَالُوا: لِعُمَرَ بْنِ الْخَطَّابِ، فَذَكَرْتُ غَيْرَةَ عُمَرَ، فَوَلَّيْتُ مُدْبِرًا ” قَالَ أَبُو هُرَيْرَةَ فَبَكَى عُمَرُ، وَنَحْنُ جَمِيعًا فِي ذَلِكَ الْمَجْلِسِ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ عُمَرُ: بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللهِ أَعَلَيْكَ أَغَارُ؟

– وحَدَّثَنِيهِ عَمْرٌو النَّاقِدُ وَحَسَنٌ الْحُلْوَانِيُّ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالُوا: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


Tamil-4767
Shamila-2395
JawamiulKalim-4416




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.