நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
(ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கம்பளியாடையைப் போர்த்தியபடி தமது விரிப்பில் ஒருக்களித்துப் படுத்திருந்தபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதே நிலையில் (படுத்துக்கொண்டு) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். அவர்கள் உள்ளே வந்து தமது அலுவலை(ப் பற்றி பேசி) முடித்துக்கொண்டு பிறகு திரும்பிச் சென்றார்கள்.
பிறகு உமர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதே நிலையில் (படுத்துக்கொண்டே) உமர் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் உள்ளே வந்து தமது அலுவலை(ப் பற்றி பேசி) முடித்துக்கொண்டு பிறகு திரும்பிச் சென்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு நான் வந்து உள்ளே நுழைய அவர்களிடம் அனுமதி கேட்டேன். உடனே அவர்கள் (எழுந்து) அமர்ந்துகொண்டார்கள். மேலும் (தம் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “உனது ஆடையை எடுத்து நன்கு அணிந்து கொள்” என்று கூறினார்கள். நான் அவர்களிடம் எனது அலுவலை முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றேன்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ர், உமர் ஆகியோருக்காக அசையாத நீங்கள் உஸ்மான் அவர்களுக்காக ஆடிப்போய்விட்டீர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உஸ்மான் நாணம் மிகுந்த மனிதர். நான் அதே நிலையில் இருந்துகொண்டு அவருக்கு உள்ளே வர அனுமதியளித்தால், அவர் தமது தேவையை என்னிடம் தெரிவிக்காமலேயே போய்விடுவாரோ என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– ஆயிஷா (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், “அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டார்கள்…”என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
Book : 44
(முஸ்லிம்: 4773)حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، أَنَّ سَعِيدَ بْنَ الْعَاصِ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعُثْمَانَ، حَدَّثَاهُ
أَنَّ أَبَا بَكْرٍ اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ، لَابِسٌ مِرْطَ عَائِشَةَ، فَأَذِنَ لِأَبِي بَكْرٍ وَهُوَ كَذَلِكَ، فَقَضَى إِلَيْهِ حَاجَتَهُ، ثُمَّ انْصَرَفَ، ثُمَّ اسْتَأْذَنَ عُمَرُ، فَأَذِنَ لَهُ وَهُوَ عَلَى تِلْكَ الْحَالِ فَقَضَى إِلَيْهِ حَاجَتَهُ، ثُمَّ انْصَرَفَ، قَالَ عُثْمَانُ: ثُمَّ اسْتَأْذَنْتُ عَلَيْهِ فَجَلَسَ، وَقَالَ لِعَائِشَةَ: «اجْمَعِي عَلَيْكِ ثِيَابَكِ» فَقَضَيْتُ إِلَيْهِ حَاجَتِي، ثُمَّ انْصَرَفْتُ، فَقَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللهِ مَالِي لَمْ أَرَكَ فَزِعْتَ لِأَبِي بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، كَمَا فَزِعْتَ لِعُثْمَانَ؟ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ عُثْمَانَ رَجُلٌ حَيِيٌّ، وَإِنِّي خَشِيتُ، إِنْ أَذِنْتُ لَهُ عَلَى تِلْكَ الْحَالِ، أَنْ لَا يَبْلُغَ إِلَيَّ فِي حَاجَتِهِ»
– حَدَّثَنَاهُ عَمْرٌو النَّاقِدُ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ كُلُّهُمْ، عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ، أَنَّ سَعِيدَ بْنَ الْعَاصِ، أَخْبَرَهُ أَنَّ عُثْمَانَ، وَعَائِشَةَ، حَدَّثَاهُ أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ
Tamil-4773
Shamila-2402
JawamiulKalim-4422
சமீப விமர்சனங்கள்