தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4834

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) எனது பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றோம். இரவு நேரப் பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக் கொண்டேவருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா என்னிடம், “இன்றிரவு நீங்கள் எனது ஒட்டகத்தில் பயணம் செய்துபாருங்கள்; நான் உங்களது ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்” என்று கேட்டார்கள். நான் “சரி” என்று (சம்மதம்) கூறினேன்.

ஆகவே, நான் ஹஃப்ஸாவின் ஒட்டகத்தில் ஏறிக்கொண்டேன்; ஹஃப்ஸா எனது ஒட்டகத்தில் ஏறிக்கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறிவந்த) எனது ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகமன் (சலாம்) சொன்னார்கள். பிறகு அவருடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

(பயணத்தின் இடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கித் தங்கினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணாமல் அவர்களை நான் தேடினேன். (தன்மான உணர்வினால்) எனக்கு ரோஷம் ஏற்பட்டது. அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் எனது இரு கால்களையும் “இத்கிர்” புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, “இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என்மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்” என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்து கொள்ளத்தான் முடிந்ததே தவிர,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 44

(முஸ்லிம்: 4834)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، كِلَاهُمَا عَنْ أَبِي نُعَيْمٍ، قَالَ عَبْدٌ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا خَرَجَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ فَطَارَتِ الْقُرْعَةُ عَلَى عَائِشَةَ وَحَفْصَةَ فَخَرَجَتَا مَعَهُ جَمِيعًا، وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا كَانَ بِاللَّيْلِ، سَارَ مَعَ عَائِشَةَ يَتَحَدَّثُ مَعَهَا، فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ: أَلَا تَرْكَبِينَ اللَّيْلَةَ بَعِيرِي وَأَرْكَبُ بَعِيرَكِ، فَتَنْظُرِينَ وَأَنْظُرُ؟ قَالَتْ: بَلَى، فَرَكِبَتْ عَائِشَةُ عَلَى بَعِيرِ حَفْصَةَ، وَرَكِبَتْ حَفْصَةُ عَلَى بَعِيرِ عَائِشَةَ، فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَمَلِ عَائِشَةَ وَعَلَيْهِ حَفْصَةُ، فَسَلَّمَ ثُمَّ سَارَ مَعَهَا، حَتَّى نَزَلُوا، فَافْتَقَدَتْهُ عَائِشَةُ فَغَارَتْ، فَلَمَّا نَزَلُوا جَعَلَتْ تَجْعَلُ رِجْلَهَا بَيْنَ الْإِذْخِرِ وَتَقُولُ يَا رَبِّ سَلِّطْ عَلَيَّ عَقْرَبًا أَوْ حَيَّةً تَلْدَغُنِي رَسُولُكَ وَلَا أَسْتَطِيعُ أَنْ أَقُولَ لَهُ شَيْئًا


Tamil-4834
Shamila-2445
JawamiulKalim-4484




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.