ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் “துல்கலஸா” என்றழைக்கப்பட்டுவந்த (இணைவைப்பாளர்களின்) ஆலயம் ஒன்று இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா” என்றும் “ஷாம் நாட்டு (திசையை நோக்கி வாசல் அமைந்த) கஅபா” என்றும் அழைக்கப்பட்டுவந்தது.
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னை துல்கலஸாவிலிருந்தும் யமன் நாட்டு கஅபா, ஷாம் நாட்டு கஅபா எனப்படும் அந்த ஆலயத்தி(ன் கவலையி)லிருந்தும் விடுவிப்பீரா?” என்று கேட்டார்கள்.
உடனே நான் “அஹ்மஸ்” எனும் (என்) குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் அங்கு விரைந்தேன். அதை நாங்கள் உடைத்துவிட்டு அதனருகில் இருந்தவர்களைக் கொன்றோம். பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்காகவும் (இந்த நடவடிக்கையில் பங்கேற்ற) “அஹ்மஸ்” குலத்தாருக்காகவும் பிரார்த்தித்தார்கள்.
Book : 44
(முஸ்லிம்: 4882)حَدَّثَنِي عَبْدُ الحَمِيدِ بْنُ بَيَانٍ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ
كَانَ فِي الْجَاهِلِيَّةِ بَيْتٌ يُقَالُ لَهُ ذُو الْخَلَصَةِ، وَكَانَ يُقَالُ لَهُ الْكَعْبَةُ الْيَمَانِيَةُ، وَالْكَعْبَةُ الشَّامِيَّةُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ أَنْتَ مُرِيحِي مِنْ ذِي الْخَلَصَةِ، وَالْكَعْبَةِ الْيَمَانِيَةِ وَالشَّامِيَّةِ؟» فَنَفَرْتُ إِلَيْهِ فِي مِائَةٍ وَخَمْسِينَ مِنْ أَحْمَسَ، فَكَسَرْنَاهُ وَقَتَلْنَا مَنْ وَجَدْنَا عِنْدَهُ، فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ، قَالَ: «فَدَعَا لَنَا وَلِأَحْمَسَ»
Tamil-4882
Shamila-2476
JawamiulKalim-4530
சமீப விமர்சனங்கள்