தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4883

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “ஜரீரே! துல்கலஸாவி(ன் கவலையி) லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அது “கஸ்அம்” குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா” என்று அழைக்கப் பட்டுவந்தது.

எனவே, நான் (“அஹ்மஸ்” குலத்தைச் சேர்ந்த) நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் விரைந்தேன். நான் குதிரையின் மீது (சரியாக) அமர முடியாதவனாக இருந்தேன். இது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் என் நெஞ்சில் அடித்து, “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

உடனே நான் அங்கு சென்று அதைத் தீயிட்டு எரித்துவிட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த நற்செய்தியைச் சொல்வதற்காக எங்களில் “அபூஅர்த்தாத்” எனப்படும் ஒரு மனிதரை அனுப்பினேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அ(ந்த ஆலயத்)தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று ஆக்கிவிட்டுத்தான் உங்களிடம் வந்துள்ளேன்” என்று சொன்னார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அஹ்மஸ் குலத்தாரின் குதிரைகளுக்காகவும் அக்குலத்தாருக்காகவும் வளம் வேண்டி ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாவும் வந்துள்ளது.

அவற்றில் மர்வான் அல்ஃபஸாரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்து நற்செய்தி சொல்லும் தூதுவராக அபூஅர்த்தாத் ஹுஸைன் பின் ரபீஆ (ரலி) அவர்கள் வந்து நபி (ஸல்) அவர்களிடம் (அந்த) நற்செய்தியைச் சொன்னார்” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 44

(முஸ்லிம்: 4883)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ الْبَجَلِيِّ، قَالَ

قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا جَرِيرُ أَلَا تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ» بَيْتٍ لِخَثْعَمَ كَانَ يُدْعَى كَعْبَةَ الْيَمَانِيَةِ، قَالَ: فَنَفَرْتُ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ، وَكُنْتُ لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَضَرَبَ يَدَهُ فِي صَدْرِي فَقَالَ: «اللهُمَّ ثَبِّتْهُ، وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا» قَالَ: فَانْطَلَقَ فَحَرَّقَهَا بِالنَّارِ، ثُمَّ بَعَثَ جَرِيرٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَجُلًا يُبَشِّرُهُ يُكْنَى أَبَا أَرْطَاةَ مِنَّا، فَأَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: مَا جِئْتُكَ حَتَّى تَرَكْنَاهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْرَبُ، فَبَرَّكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى خَيْلِ أَحْمَسَ، وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ.

– حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي الْفَزَارِيَّ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ كُلُّهُمْ، عَنْ إِسْمَاعِيلَ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَ فِي حَدِيثِ مَرْوَانَ: فَجَاءَ بَشِيرُ جَرِيرٍ أَبُو أَرْطَاةَ حُصَيْنُ بْنُ رَبِيعَةَ، يُبَشِّرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Tamil-4883
Shamila-2476
JawamiulKalim-4531




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.