பாடம் : 31
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) கண்ட கனவில், எனது கையில் பட்டுத் துண்டு இருப்பதைப் போன்றும் சொர்க்கத்தில் நான் விரும்புகின்ற இடத்திற்கெல்லாம் அது என்னைத் தூக்கிக்கொண்டு பறப்பதைப் போன்றும் கண்டேன். இது குறித்து நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அது குறித்து ஹஃப்ஸா, நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தபோது நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் ஒரு நல்ல மனிதர் என்றே நான் அறிகிறேன்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 44
(முஸ்லிம்: 4885)31 – بَابُ مِنْ فَضَائِلِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَخَلَفُ بْنُ هِشَامٍ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، كُلُّهُمْ عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، قَالَ: أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ
رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ فِي يَدِي قِطْعَةَ إِسْتَبْرَقٍ، وَلَيْسَ مَكَانٌ أُرِيدُ مِنَ الْجَنَّةِ إِلَّا طَارَتْ إِلَيْهِ، قَالَ فَقَصَصْتُهُ عَلَى حَفْصَةَ، فَقَصَّتْهُ حَفْصَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَى عَبْدَ اللهِ رَجُلًا صَالِحًا»
Tamil-4885
Shamila-2478
JawamiulKalim-4533
சமீப விமர்சனங்கள்