தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4897

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கவி பாடிக்கொண்டிருந்தபோது, அங்கு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். ஹஸ்ஸானை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தார்கள்.

ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், “நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களைவிடச் சிறந்தவர் (நபியவர்கள்) இருந்தபோது கவிபாடிக்கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, என்னை நோக்கித் திரும்பி, “அல்லாஹ்வின் பெயரால் உம்மிடம் கேட்கிறேன்: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு “ரூஹுல் குதுஸ்” (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல்) மூலம் வலிமையூட்டுவாயாக!” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “ஆம்; இறைவா (நீயே சாட்சி)!” என்று பதிலளித்தேன்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் ஓர் அவையில் இருந்தார்கள். அதில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், “அபூ ஹுரைரா அவர்களே! அல்லாஹ்வின் பெயரால் உம்மிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று வினவியதாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளன.

Book : 44

(முஸ்லிம்: 4897)

34 – بَابُ فَضَائِلِ حَسَّانَ بْنِ ثَابِتٍ رَضِيَ اللهُ عَنْهُ

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، كُلُّهُمْ عَنْ سُفْيَانَ، قَالَ: عَمْرٌو، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ

أَنَّ عُمَرَ، مَرَّ بِحَسَّانَ وَهُوَ يُنْشِدُ الشِّعْرَ فِي الْمَسْجِدِ، فَلَحَظَ إِلَيْهِ، فَقَالَ: قَدْ كُنْتُ أُنْشِدُ، وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ، ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقَالَ: أَنْشُدُكَ اللهَ أَسَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَجِبْ عَنِّي، اللهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ»؟ قَالَ: اللهُمَّ نَعَمْ.

– حَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، أَنَّ حَسَّانَ، قَالَ فِي حَلْقَةٍ فِيهِمْ أَبُو هُرَيْرَةَ: أَنْشُدُكَ اللهَ يَا أَبَا هُرَيْرَةَ أَسَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ مِثْلَهُ


Tamil-5897
Shamila-2485
JawamiulKalim-4545




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.