தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4947

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைஷிப் பெண்கள்தான் ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள். (தம்) குழந்தைகள்மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிப் பாதுகாக்கக்கூடியவர்கள்.

இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு அறிவித்து விட்டுத் தொடர்ந்து, “இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) அவர்கள் ஒட்டகம் எதிலும் பயணம் செய்ததேயில்லை” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “நபி (ஸல்) அவர்கள் “உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி)” அவர்களைத் தமக்காகப் பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஹானீ அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வயதாகி விட்டது; எனக்குக் குழந்தை குட்டிகளும் உள்ளனர்” என்று கூறி (மறுத்து) விட்டார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள், (மேற்கண்டவாறு) “ஒட்டகத்தில் பயணம் செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள்…” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

ஆயினும் இவற்றில் “(தம்) குழந்தைகள் மீது அதிகப் பாசமுடையவர்கள்” எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

Book : 44

(முஸ்லிம்: 4947)

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«نِسَاءُ قُرَيْشٍ خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الْإِبِلَ، أَحْنَاهُ عَلَى طِفْلٍ، وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ» قَالَ: يَقُولُ أَبُو هُرَيْرَةَ عَلَى إِثْرِ ذَلِكَ: وَلَمْ تَرْكَبْ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ بَعِيرًا قَطُّ

– حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ – قَالَ عَبْدٌ: أَخْبَرَنَا، وقَالَ ابْنُ رَافِعٍ: حَدَّثَنَا – عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَطَبَ أُمَّ هَانِئٍ، بِنْتَ أَبِي طَالِبٍ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنِّي قَدْ كَبِرْتُ، وَلِي عِيَالٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ» ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ يُونُسَ غَيْرَ أَنَّهُ قَالَ «أَحْنَاهُ عَلَى وَلَدٍ فِي صِغَرِهِ»


Tamil-4947
Shamila-2527
JawamiulKalim-4596




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.