பாடம் : 52
நபித்தோழர்கள், பிறகு அவர்களை அடுத்து வந்தவர்கள் (தாபிஈன்), பிறகு அவர்களை அடுத்து வந்தவர்கள் (தபஉத் தாபிஈன்) ஆகியோரின் சிறப்பு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் ஒரு குழுவினர் அறப்போர் புரியச் செல்கின்ற ஒரு காலம் வரும். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தவர்கள் (நபித்தோழர்கள்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு அக்குழுவினர், “ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அடுத்த தலைமுறை) மக்களில் மற்றொரு குழுவினர் அறப்போர் புரியச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களைப் பார்த்தவர்கள் (தாபிஉகள்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அப்போது அக்குழுவினர் “ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும்.
பிறகு (அதற்கடுத்த தலைமுறை) மக்களில் வேறொரு குழுவினர் அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்களுடன் தோழமைகொண்டிருந்தவர்கள் (தபஉத் தாபிஈன்) எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அதற்கு அக்குழுவினர் “ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிப்பார்கள். ஆகவே, அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 44
(முஸ்லிம்: 4954)52 – بَابُ فَضْلِ الصَّحَابَةِ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ
حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ: سَمِعَ عَمْرٌو جَابِرًا، يُخْبِرُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ لَهُمْ: فِيكُمْ مَنْ رَأَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيَقُولُونَ: نَعَمْ، فَيُفْتَحُ لَهُمْ، ثُمَّ يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ لَهُمْ: فِيكُمْ مَنْ رَأَى مَنْ صَحِبَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيَقُولُونَ: نَعَمْ، فَيُفْتَحُ لَهُمْ، ثُمَّ يَغْزُو فِئَامٌ مِنَ النَّاسِ، فَيُقَالُ لَهُمْ: هَلْ فِيكُمْ مَنْ رَأَى مَنْ صَحِبَ مَنْ صَحِبَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَيَقُولُونَ: نَعَمْ فَيُفْتَحُ لَهُمْ
Tamil-4954
Shamila-2532
JawamiulKalim-4603
சமீப விமர்சனங்கள்