பாடம் : 50
மனிதன் யார்மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்துவைத்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நேசம் வைத்துள்ளேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) இருப்பாய்” என்று சொன்னார்கள்.
Book : 45
(முஸ்லிம்: 5139)50 – بَابُ الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ أَعْرَابِيًّا، قَالَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَتَى السَّاعَةُ؟ قَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَا أَعْدَدْتَ لَهَا؟ قَالَ: حُبَّ اللهِ وَرَسُولِهِ، قَالَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ»
Tamil-5139
Shamila-2639
JawamiulKalim-4781
சமீப விமர்சனங்கள்