தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5153

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களிடம்,) “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார், நரகவாசிகள் யார் என்பது (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று சொன்னார்கள். “அவ்வாறாயின், ஏன் நற்செயல் புரிபவர்கள் நற்செயல் புரிய வேண்டும்?” என்று வினவப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “(நீங்கள் செயல்படுங்கள்) ஒவ்வொருவரும் எ(தை அடை)வதற்காகப் படைக்கப்பட்டுள்ளார்களோ அது எளிதாக்கப்படும்” என்று சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “நான் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே…?” என்று கேட்டேன் என இடம்பெற்றுள்ளது.

Book : 46

(முஸ்லிம்: 5153)

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَزِيدَ الضُّبَعِيِّ، حَدَّثَنَا مُطَرِّفٌ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ

قِيلَ: يَا رَسُولَ اللهِ أَعُلِمَ أَهْلُ الْجَنَّةِ مَنْ أَهْلِ النَّارِ؟ قَالَ: فَقَالَ: نَعَمْ، قَالَ قِيلَ: فَفِيمَ يَعْمَلُ الْعَامِلُونَ؟ قَالَ: «كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ»

– حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَابْنُ نُمَيْرٍ، عَنِ ابْنِ عُلَيَّةَ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، كُلُّهُمْ عَنْ يَزِيدَ الرِّشْكِ، فِي هَذَا الْإِسْنَادِ، بِمَعْنَى حَدِيثِ حَمَّادٍ، وَفِي حَدِيثِ عَبْدِ الْوَارِثِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ


Tamil-5153
Shamila-2649
JawamiulKalim-4795




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.