பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், நீ இரவில் படுக்கைக்கு (உறங்க)ச் செல்லும்போது, “அல்லாஹும்ம! அஸ்லம்த்து நஃப்சீ இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க, வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க; ரக்ஃபத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க, ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி ரசூலிக்கல்லதீ அர்சல்த்த” என்று சொல்லும்படி உத்தரவிட்டார்கள்.
“அவர் (இவ்வாறு பிரார்த்தித்துவிட்டு உறங்கும்போது) இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்” என்றும் கூறினார்கள்.
(பொருள்: இறைவா! என்னை நான் உன்னிடம் ஒப்படைத்தேன். என் முகத்தை உன்னளவில் திருப்பிவிட்டேன். எனது முதுகை உன்னளவில் சாய்த்துவிட்டேன். என் காரியங்கள் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். உன்மீதுள்ள அன்பிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும் நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இரவில்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
Book : 48
(முஸ்லிம்: 5250)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، وَأَبُو دَاوُدَ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ، يُحَدِّثُ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَمَرَ رَجُلًا إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ أَنْ يَقُولَ: «اللهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لَا مَلْجَأَ وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنْ مَاتَ مَاتَ عَلَى الْفِطْرَةِ» وَلَمْ يَذْكُرِ ابْنُ بَشَّارٍ فِي حَدِيثِهِ: مِنَ اللَّيْلِ
Tamil-5250
Shamila-2710
JawamiulKalim-4891
சமீப விமர்சனங்கள்