மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் உறங்கச் செல்லும்போது மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி பிரார்த்திக்கும் படி உத்தரவிடுவார்கள்” என்று காணப்படுகிறது. மேலும் அதில், (“மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்த்த ஆகிதும் பி நாஸியத்திஹ்” என்பதற்குப் பகரமாக) “மின் ஷர்ரி குல்லி தாப்பத்தின் அன்த்த ஆகிதும் பிநாஸியத் திஹா” என்று இடம்பெற்றுள்ளது.
(பொருள்: அனைத்து உயிரினங்களின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். அவற்றின் முன்நெற்றி ரோமங்களை நீயே பிடித்துள்ளாய்.)
Book : 48
(முஸ்லிம்: 5255)وحَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي الطَّحَّانَ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَأْمُرُنَا إِذَا أَخَذْنَا مَضْجَعَنَا، أَنْ نَقُولَ، بِمِثْلِ حَدِيثِ جَرِيرٍ، وَقَالَ: «مِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا»
Tamil-5255
Shamila-2713
JawamiulKalim-4894
சமீப விமர்சனங்கள்