தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5471

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், “பெருமையடிப்பவர் களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னது. சொர்க்கம், “எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ் நிலையினரும் அப்பாவிகளுமே (அதிகமாக) எனக்குள் நுழைவார்கள்” என்று கூறியது.

அல்லாஹ் சொர்க்கத்திடம், “நீயே எனது பேரருள். உன் மூலம் என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள்புரிகிறேன்” என்றும் நரகத்திடம், “நீ எனது வேதனை(க்காகத்)தான். உன் மூலம் என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன். உங்களில் ஒவ்வொருவருக்கும் (வயிறு) நிரம்பத் தரப்படும்” என்றும் கூறினான்.

ஆனால், நரகமோ வளமும் உயர்வும் மிக்க இறைவன் தனது காலை அதன் மீது வைக்காத வரை (வயிறு) நிரம்பாது. (இறைவன் காலை வைக்கும்போது,) நரகம் “போதும்; போதும்” என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்துக்கென அல்லாஹ் புதிதாக யாரையும் படைப்பதில்லை. மாறாக,) நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான். ஆனால், சொர்க்கத்தி(ல் மீதியிருக்கும் இடத்தி)ற்கென்றே புதிதாகச் சிலரைப் படை(த்து அதை நிறைப்)பான்.

– மேற்கண்ட ஹதீஸ், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன” என்று தொடங்கி, “உங்களில் ஒவ்வொருவருக்கும் (வயிறு) நிரம்பத் தருவது என் பொறுப்பாகும்” என்பதுவரை இடம் பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள கூடுதல் தகவல்கள் இல்லை.

Book : 51

(முஸ்லிம்: 5471)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ: هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا، وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

تَحَاجَّتِ الْجَنَّةُ وَالنَّارُ، فَقَالَتِ النَّارُ: أُوثِرْتُ بِالْمُتَكَبِّرِينَ، وَالْمُتَجَبِّرِينَ، وَقَالَتِ الْجَنَّةُ: فَمَا لِي لَا يَدْخُلُنِي إِلَّا ضُعَفَاءُ النَّاسِ وَسَقَطُهُمْ وَغِرَّتُهُمْ؟ قَالَ اللهُ لِلْجَنَّةِ: إِنَّمَا أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي، وَقَالَ لِلنَّارِ: إِنَّمَا أَنْتِ عَذَابِي أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي، وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْكُمَا مِلْؤُهَا، فَأَمَّا النَّارُ فَلَا تَمْتَلِئُ حَتَّى يَضَعَ اللهُ، تَبَارَكَ وَتَعَالَى، رِجْلَهُ، تَقُولُ: قَطْ قَطْ قَطْ، فَهُنَالِكَ تَمْتَلِئُ، وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ، وَلَا يَظْلِمُ اللهُ مِنْ خَلْقِهِ أَحَدًا، وَأَمَّا الْجَنَّةُ فَإِنَّ اللهَ يُنْشِئُ لَهَا خَلْقًا

– وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْتَجَّتِ الْجَنَّةُ وَالنَّارُ» فَذَكَرَ نَحْوَ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ، إِلَى قَوْلِهِ «وَلِكِلَيْكُمَا عَلَيَّ مِلْؤُهَا» وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ مِنَ الزِّيَادَةِ


Tamil-5471
Shamila-2846,
2847
JawamiulKalim-5084




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.