அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மாடி) அறையொன்றில் இருந்தார்கள். நாங்கள் கீழே இருந்தோம். அப்போது அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, “என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “யுக முடிவைப் பற்றி (பேசிக்கொண்டிருக்கிறோம்)” என்று சொன்னோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுகமுடிவு நாள் வராது.
1 . கிழக்கில் ஒரு நிலநடுக்கம்.
2 . மேற்கில் ஒரு நிலநடுக்கம்.
3 . அரபு தீபகற்பத்தில் ஒரு நிலநடுக்கம்.
4 . புகை.
5 . தஜ்ஜால்.
6 . பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் (அதிசயப்) பிராணி.
7 . யஃஜூஜ், மஃஜூஜ்.
8 . சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது.
9 . (யமன் நாட்டிலுள்ள)”அதன்” பகுதியின் கடைக்கோடியிலிருந்து ஒரு நெருப்புக் கிளம்பி மக்களை வாகனங்களில் ஏறிப் பயணம் புறப்படச் செய்வது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்களிடமிருந்து அபுத்துஃபைல் (ரஹ்) அவர்களும் அபுத்துஃபைலிடமிருந்து அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்களும் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் எனக்குக் கிடைத்தது. அதில் மேற்கண்ட செய்தி அபூசரீஹா ஹுதைஃபா (ரலி) அவர்களின் கூற்றாகவே வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இல்லை.
ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்த ஹதீஸை மேற்கண்ட இரு அறிவிப்பாளர்களில் ஒருவர்,
10 . பத்தாவது “மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குதல்” என்றும்,
மற்றொருவர் “ஒரு காற்று கிளம்பி மக்களைக் கடலில் தூக்கி வீசுதல்” என்றும் கூறினர்.
அத்தியாயம்: 52
(முஸ்லிம்: 5559)حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فُرَاتٍ الْقَزَّازِ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ أَبِي سَرِيحَةَ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ، قَالَ
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غُرْفَةٍ وَنَحْنُ أَسْفَلَ مِنْهُ، فَاطَّلَعَ إِلَيْنَا، فَقَالَ: مَا تَذْكُرُونَ؟ ” قُلْنَا: السَّاعَةَ، قَالَ: ” إِنَّ السَّاعَةَ لَا تَكُونُ حَتَّى تَكُونَ عَشْرُ آيَاتٍ: خَسْفٌ بِالْمَشْرِقِ، وَخَسْفٌ بِالْمَغْرِبِ، وَخَسْفٌ فِي جَزِيرَةِ الْعَرَبِ وَالدُّخَانُ وَالدَّجَّالُ، وَدَابَّةُ الْأَرْضِ، وَيَأْجُوجُ وَمَأْجُوجُ، وَطُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَنَارٌ تَخْرُجُ مِنْ قُعْرَةِ عَدَنٍ تَرْحَلُ النَّاسَ “
قَالَ شُعْبَةُ: وَحَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ أَبِي سَرِيحَةَ، مِثْلَ ذَلِكَ، لَا يَذْكُرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وقَالَ أَحَدُهُمَا فِي الْعَاشِرَةِ: نُزُولُ عِيسَى ابْنِ مَرْيَمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،
وقَالَ الْآخَرُ: وَرِيحٌ تُلْقِي النَّاسَ فِي الْبَحْرِ
Muslim-Tamil-5559.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2901.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-5167.
சமீப விமர்சனங்கள்