தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5560

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மாடி)அறை ஒன்றில் இருந்தார்கள். அப்போது அதற்குக் கீழே நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடர்கின்றன.

அதில் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், “ஃபுராத் அல்கஸ்ஸார் (ரஹ்) அவர்கள் “அந்த நெருப்பு அவர்கள் வாகனங்களிலிருந்து இறங்கித் தங்கும்போதும் அவர்கள் மதிய ஓய்வு மேற்கொள்ளும்போதும் அவர்களுடனேயே இருக்கும்” என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்ததாக இடம்பெற்றுள்ளது.

மேலும் ஷுஅபா (ரஹ்) அவர்கள், “இந்த ஹதீஸை அபூசரீஹா (ரலி) அவர்களிடமிருந்து அபுத்துபைல் (ரஹ்) அவர்களும் அவர்களிடமிருந்து மற்றொரு மனிதரும் எனக்கு அறிவித்தனர்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை.

மேலும் அபூசரீஹாவிடமிருந்து அறிவிக்கும் இவ்விருவரில் ஒருவர், “மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குவார்கள்” என்பதையும், மற்றொருவர் “ஒரு காற்று கிளம்பி மக்களைத் தூக்கிக் கடலில் வீசும்” என்பதையும் குறிப்பிட்டனர்” என்று காணப்படுகிறது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூசரீஹா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஓர் அறிவிப்பில், “நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது (மாடியிலிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்தார்கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.

மற்றோர் அறிவிப்பில், “பத்தாவது அடையாளம், மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குவதாகும்” என்று இடம்பெற்றுள்ளது. அதில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரை அப்துல் அஸீஸ் பின் ருஃபை (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முடிக்கவில்லை. அபூசரீஹா (ரலி) அவர்கள் கூறியதாகவே முடிக்கிறார்கள்.

Book : 52

(முஸ்லிம்: 5560)

وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فُرَاتٍ، قَالَ: سَمِعْتُ أَبَا الطُّفَيْلِ يُحَدِّثُ، عَنْ أَبِي سَرِيحَةَ، قَالَ

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غُرْفَةٍ، وَنَحْنُ تَحْتَهَا نَتَحَدَّثُ، وَسَاقَ الْحَدِيثَ، بِمِثْلِهِ. قَالَ شُعْبَةُ: وَأَحْسِبُهُ قَالَ: تَنْزِلُ مَعَهُمْ إِذَا نَزَلُوا، وَتَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا، قَالَ شُعْبَةُ: وَحَدَّثَنِي رَجُلٌ هَذَا الْحَدِيثَ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ أَبِي سَرِيحَةَ، وَلَمْ يَرْفَعْهُ، قَالَ: أَحَدُ هَذَيْنِ الرَّجُلَيْنِ: نُزُولُ عِيسَى ابْنِ مَرْيَمَ، وقَالَ الْآخَرُ: رِيحٌ تُلْقِيهِمْ فِي الْبَحْرِ

– وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ الْحَكَمُ بْنُ عَبْدِ اللهِ الْعِجْلِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ فُرَاتٍ، قَالَ: سَمِعْتُ أَبَا الطُّفَيْلِ يُحَدِّثُ، عَنْ أَبِي سَرِيحَةَ، قَالَ: كُنَّا نَتَحَدَّثُ، فَأَشْرَفَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِنَحْوِ حَدِيثِ مُعَاذٍ وَابْنِ جَعْفَرٍ، وقَالَ ابْنُ الْمُثَنَّى: حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ الْحَكَمُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ أَبِي سَرِيحَةَ، بِنَحْوِهِ. قَالَ: وَالْعَاشِرَةُ نُزُولُ عِيسَى ابْنِ مَرْيَمَ، قَالَ شُعْبَةُ: وَلَمْ يَرْفَعْهُ عَبْدُ الْعَزِيزِ


Tamil-5560
Shamila-2901
JawamiulKalim-5167




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.