மேற்கண்ட ஹதீஸ் யஅகூப் பின் ஆஸிம் பின் உர்வா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், “ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், “யுக முடிவு நாளின்போது இன்னின்னது நடக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு எதையும் அறிவிக்கக்கூடாது என்றே நான் எண்ணியிருந்தேன். இதை மட்டும் கூறுகிறேன்: நீங்கள் சிறிது காலத்திற்குப்பின் மாபெரும் நிகழ்வொன்றைக் காண்பீர்கள். அதில் இறையில்லம் கஅபா தீக்கிரையாகும்” என்றோ,அல்லது இது போன்றோ கூறினார்கள்” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
மேலும் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “என் சமுதாயத்தாரிடையே தஜ்ஜால் புறப்பட்டுவருவான்…” என்று கூறி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பில், “(ஷாம் திசையிலிருந்து வீசும் அந்தக் குளிர்ந்த காற்று) தம், உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ள எந்த மனித(ரின் உயி)ரையும் கைப்பற்றாமல் விடாது” என்று இடம்பெற்றுள்ளது. (அதில் தமது உள்ளத்தில் கடுகளவு “நன்மை” அல்லது “இறைநம்பிக்கை” என்ற ஐயப்பாடு இடம்பெறவில்லை.)
அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை எனக்கு ஷுஅபா (ரஹ்) அவர்கள் பலமுறை அறிவித்தார்கள். நானும் இதை அவர்களிடம் (பலமுறை) சொல்லிக் காட்டியுள்ளேன்.
Book : 52
(முஸ்லிம்: 5636)وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، قَالَ: سَمِعْتُ يَعْقُوبَ بْنَ عَاصِمِ بْنِ عُرْوَةَ بْنِ مَسْعُودٍ، قَالَ
سَمِعْتُ رَجُلًا قَالَ لِعَبْدِ اللهِ بْنِ عَمْرٍو: إِنَّكَ تَقُولُ: إِنَّ السَّاعَةَ تَقُومُ إِلَى كَذَا وَكَذَا، فَقَالَ: لَقَدْ هَمَمْتُ أَنْ لَا أُحَدِّثَكُمْ بِشَيْءٍ، إِنَّمَا قُلْتُ: إِنَّكُمْ تَرَوْنَ بَعْدَ قَلِيلٍ أَمْرًا عَظِيمًا، فَكَانَ حَرِيقَ الْبَيْتِ – قَالَ شُعْبَةُ: هَذَا أَوْ نَحْوَهُ – قَالَ عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْرُجُ الدَّجَّالُ فِي أُمَّتِي» وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ مُعَاذٍ، وَقَالَ فِي حَدِيثِهِ: «فَلَا يَبْقَى أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ إِلَّا قَبَضَتْهُ» قَالَ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ: حَدَّثَنِي شُعْبَةُ بِهَذَا الْحَدِيثِ مَرَّاتٍ، وَعَرَضْتُهُ عَلَيْهِ
Tamil-5636
Shamila-2940
JawamiulKalim-5237
சமீப விமர்சனங்கள்