தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5723

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

எலியும் அது உருமாற்றம் பெற்ற உயிரினம் என்பதும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஒரு குழுவினர் (மர்மமான முறையில்) காணாமற்போய் விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே நான் கருதுகிறேன். எலிகளுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால், அவை அந்தப் பாலைக்குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால், அந்தப் பாலை அவை குடித்துவிடுகின்றனவே?

இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தபோது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?” என்று வினவினார்கள். நான், “ஆம்” என்றேன். அவ்வாறே அவர்கள் பலமுறை கேட்டார்கள். “நான் “தவ்ராத்”தையா ஓதுகிறேன் (அதிலிருந்து சொல்வதற்கு)?” என்று நான் கேட்டேன்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர்கள் என்ன ஆனார்கள் என்று நாம் அறியவில்லை” எனக் காணப்படுகிறது.

Book : 53

(முஸ்லிம்: 5723)

11 – بَابٌ فِي الْفَأْرِ وَأَنَّهُ مَسْخٌ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الرُّزِّيُّ، جَمِيعًا عَنِ الثَّقَفِيِّ – وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى – حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«فُقِدَتْ أُمَّةٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ، لَا يُدْرَى مَا فَعَلَتْ، وَلَا أُرَاهَا إِلَّا الْفَأْرَ، أَلَا تَرَوْنَهَا إِذَا وُضِعَ لَهَا أَلْبَانُ الْإِبِلِ لَمْ تَشْرَبْهُ، وَإِذَا وُضِعَ لَهَا أَلْبَانُ الشَّاءِ شَرِبَتْهُ؟»، قَالَ أَبُو هُرَيْرَةَ: فَحَدَّثْتُ هَذَا الْحَدِيثَ كَعْبًا، فَقَالَ: آنْتَ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ ذَلِكَ مِرَارًا، قُلْتُ: أَأَقْرَأُ التَّوْرَاةَ؟ قَالَ إِسْحَاقُ فِي رِوَايَتِهِ: «لَا نَدْرِي مَا فَعَلَتْ»


Tamil-5723
Shamila-2997
JawamiulKalim-5319




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.